ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

"நான் கதைகளை எழுதுவதில்லை ; திருடுகிறேன்"- பாகுபலி எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத்!

"நான் கதைகளை எழுதுவதில்லை ; திருடுகிறேன்"- பாகுபலி எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத்!

வி விஜயேந்திர பிரசாத்

வி விஜயேந்திர பிரசாத்

ஒரு நல்ல எழுத்தாளர் இயக்குனர், தயாரிப்பாளர், முதன்மைக் கதாநாயகன் மற்றும் பார்வையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றார் பாகுபலி எழுத்தாளர் வி விஜயேந்திர பிரசாத்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  "நான் கதைகளை எழுதுவது இல்லை திருடுகிறேன்" என்று 53 வது சர்வதேச திரைப்பட விழாவில் பாகுபலி திரைப்படத்தின் எழுத்தாளர் வி விஜயேந்திர பிரசாத் கூறினார்.

  53 வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடந்து கொண்டு இருக்கிறது.பாகுபலி, ஆர் ஆர் ஆர் ,பஜ்ரங்கி மஸ்தானி போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் வி விஜயேந்திர பிரசாத் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்.

  அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் திரை பயணத்தை பற்றி பேசும்போது "நான் அனைத்து வேலைகளையும் செய்துள்ளேன். எழுத்தாளர் ஆகுவதற்கு முன்பு விவசாயமும் செய்து இருக்கிறேன்.

  WATCH: எஸ்.ஜே.சூர்யாவின் வதந்தி டிரெய்லரைப் பாருங்கள்

   

  கதை அசிரியர் பிரசாத் தனது திரைக்கதை எழுதும் பாணியைப் பற்றி பேசுகையில், இடைவேளையில் ஒரு திருப்பத்தை நினைத்து அதற்கேற்ப கதையை அமைக்க வேண்டும். ஒரு நல்ல பொய்யைச் சொல்லக்கூடியவர் ஒரு நல்ல கதைசொல்ல முடியும்", என்று கூறினார்.

  "சர்வதேச அளவில் எல்லைகளைக் உடைத்து சாதிக்க வேண்டுமென்ற ஆசை"- எஸ்.ஜே.சூர்யா

  அவர் மேலும் கூறியது“ உங்களைச் சுற்றிலும் கதைகள் உள்ளன. அது மகாபாரதம், ராமாயணம் அல்லது நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள் என எல்லா இடங்களிலும் கதைகள் உள்ளன" என்று வி விஜயேந்திர கூறினார்.

  "நீங்கள் உங்கள் சொந்த கடுமையான விமர்சகராக இருக்க வேண்டும், அப்போதுதான் உங்களுடைய சிறந்த தன்மை வெளிவரும், உங்கள் திறனை அளவிட முடியாத உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும்" என்று அவர் வலியுறுத்தினார்.

  பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற பிளாக்பஸ்டர் படங்களுக்கு எழுதிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட  பிரசாத், "நான் எழுதுவதில்லை, கதைகளை திருடுகிறேன். கதையின் ஓட்டம், கதாபாத்திரங்கள், திருப்பங்கள் அனைத்தும் என் மனதில் உள்ளது" என்றார்.

  ஒரு நல்ல எழுத்தாளர் இயக்குனர், தயாரிப்பாளர், முதன்மைக் கதாநாயகன் மற்றும் பார்வையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

  விஜயேந்திர பிரசாத் தற்போது உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை உருவாக்கி வருகிறார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Baahubali, Goa Film Festival, IFFI