ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vijay Sethupathi: ’எனக்குன்னு எந்த லட்சியமும் இல்ல, இதயம் சொல்றத கேப்பேன்’ - விஜய் சேதுபதி பளீச் பதில்!

Vijay Sethupathi: ’எனக்குன்னு எந்த லட்சியமும் இல்ல, இதயம் சொல்றத கேப்பேன்’ - விஜய் சேதுபதி பளீச் பதில்!

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இதயத்தைப் பின்பற்றி தனது திட்டங்களை தேர்வு செய்வது மட்டும் தான் நோக்கம் எனக் கூறிய விஜய் சேதுபதி, முடிவுகள் தவறாக இருந்தாலும், அதிலிருந்து பாடம் கற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  உங்கள் லட்சியம் என்னவென்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தனக்கென எந்த லட்சியமும் இல்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

  மிகவும் திறமையான நடிகர் விஜய் சேதுபதி இந்தியாவில் மோஸ்ட் வாண்டட் என்டர்டெய்னராக மாறியிருக்கிறார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' மற்றும் 'உப்பென்னா' ஆகியவை மிகப்பெரிய வெற்றியை பெற்றன. ஆனால் இரண்டிலும் அவர் இரக்கமற்ற வில்லனாக நடித்திருந்தார், ஆனால் பார்வையாளர்கள் இந்த கதாபாத்திரங்களை வெகுவாக ரசித்தனர்.

  இந்நிலையில் அவர் சன் டிவி-யில் தொகுத்து வழங்கவிருக்கும் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியின் ப்ரொமோஷனல் நிகழ்ச்சி பெங்களூருவில் நடந்தது. அதில் பேசிய விஜய் சேதுபதி, திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் OTT போன்ற அனைத்து தளங்களும் ஒரே மாதிரியானவை தான் என்றும், அவரது ஒரே நோக்கம் சிறந்ததைக் கொடுப்பது மட்டும் தான் எனவும் குறிப்பிட்டார்.

  சாப்பாட்டிற்காக நிறைய பேர் கஷ்டப்படுகிறார்கள் அதனால் அதை வீணடிக்கக் கூடாது எனக் கூறிய விஜய் சேதுபதி, வெளிநாடுகளுக்கு செல்லும் போது அங்குள்ள உணவை ஏற்றுக் கொள்வது சற்று கடினமாக இருப்பதாகக் கூறிய அவர், உள்ளூரை பொருத்தவரை வீட்டில் சமைத்த எதுவும் தனக்குப் பிடிக்கும் என்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அப்போது, நேர்மறை - எதிர்மறை என இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிக்கிறீர்கள். உங்கள் லட்சியம் தான் என்னவென்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, தனக்கு வாழ்க்கையில் எந்த லட்சியங்களும் இல்லை என்றும், தான் செய்ய விரும்புவதெல்லாம், இதயத்தைப் பின்பற்றி தனது திட்டங்களை தேர்வுசெய்வது மட்டும் தான் எனவும், முடிவுகள் தவறாக இருந்தாலும், அதிலிருந்து பாடம் கற்கத் தயாராக இருப்பதாகவும் பதிலளித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காதவர்கள் கை தட்டி ஆர்ப்பரித்தனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Vijay Sethupathi