ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Kamal Haasan: பிறந்தநாளை ஒருநாளில் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை - கமல் ஹாசன்

Kamal Haasan: பிறந்தநாளை ஒருநாளில் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை - கமல் ஹாசன்

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

40 ஆண்டுகளாக என் ரசிகர்கள் செய்யும் நற்பணி, அடுத்த கட்ட பயணத்திற்கு என் கட்சித் தோழர்களை தயார் செய்து வைத்திருக்கிறேன்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்று தனது 68-வது பிறந்தநாளைக் கொண்டாடும் கமல் ஹாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

  அப்போது பேசிய அவர், “இங்கே வந்திருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் என்னுடைய தோழர்களுக்கும் வணக்கம். என்னுடைய வயதின் எண்ணிக்கை எனக்கு கவுரவத்தை சேர்க்காது. மய்ய தோழர்கள் செய்திருக்கும் நற்பணிகளின் எண்ணிக்கை தான் கொளரவத்தை சேர்க்கும் என நம்புகிறேன்.

  பிறந்தநாளை ஒரு நாளில் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. வாழ்க்கையை கொண்டாட வேண்டும். என் பிறந்தநாளை காரணமாக வைத்து மக்களுக்கு நற்பணி செய்யும் மேடை அமைத்துக் கொடுக்கிறேன் அவ்வளவு தான்.

  அண்ணன், அண்ணி உள்ளிட்ட குடும்பத்தினருடன் பிறந்தநாளைக் கொண்டாடிய கமல்... வைரலாகும் படங்கள்!

  அமெரிக்கா முதல் சின்ன குக்கிராமங்களில் வரை பல இடங்களில் பல பள்ளிகளுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். கழிப்பறையும் முக்கியம்தான் மருத்துவமனையும் முக்கியம் தான். 40 ஆண்டுகளாக என் ரசிகர்கள் செய்யும் நற்பணி, அடுத்த கட்ட பயணத்திற்கு என் கட்சித் தோழர்களை தயார் செய்து வைத்திருக்கிறேன். பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் தோழர்கள் நல்ல முறையில் கொண்டாடி வருகிறார்கள்” என்று கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Kamal Haasan