ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நான் ஒரு உளறுவாயன் என்பதால் அரசியலுக்கு வரவில்லை - இயக்குநர் பாரதிராஜா

நான் ஒரு உளறுவாயன் என்பதால் அரசியலுக்கு வரவில்லை - இயக்குநர் பாரதிராஜா

பாரதிராஜா

பாரதிராஜா

நடிகையாகிவிடுவது எளிது, அரசியல்வாதியாவது சாதாரணமல்ல. ரோஜா தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபட விரும்பினார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தான் ஒரு உளறுவாயன் என்பதால் அரசியலுக்கு வரவில்லை என திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் சுற்றுலா, கலாச்சாரம், இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை ரோஜாவுக்கு தமிழ்த் திரையுலகினர் சார்பாக மே 7-ம் தேதி கலைவாணர் அரங்கில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை அண்ணாசாலை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கட்டிடத்தில் நடைபெற்றது. இயக்குநர் பாரதிராஜா , இயக்குநர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி , தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார், இசையமைப்பாளர் தினா, நடிகர் சித்ரா லட்சுமணன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

அப்போது பேசிய பாரதிராஜா, ரோஜா என்னிடம் முதன் முறை அறிமுகம் செய்யப்பட்டபோது, எனக்கு அவர் ரோஜாப்பூ மாலை அணிவித்தார், அதனால் ரோஜா என அவருக்கு பெயர் வைத்தேன். தைரியத்தின் உச்சம் ரோஜா. பல்வேறு நுணுக்கம் தெரிந்தவர் என்பதால், ஆர்.கே செல்வமணி அரசியலுக்கு வந்தால் பெரிய ஆள் ஆவார். நான் உளறுவாயன் என்பதால் அரசியலுக்கு போகவில்லை. எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உட்பட பலரும் என்னை அரசியலுக்கு வரச் சொன்னார்கள்.

செத்தாலும் திரைக் கலைஞனாக சாக வேண்டும் என்பதே எனது விருப்பம் என ஜெயலலிதாவிடம் கூறிவிட்டேன். தமிழ்நாட்டு மருமகள் ரோஜா. இந்த விழாவிற்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் (மும்பையில்) இருந்து திரைக் கலைஞர்களை வரவழைக்க உள்ளோம், என்றார்

பின்னர் பேசிய இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, ”மேடையில் பேச கூச்சப்பட்ட என்னை, பேச்சாளராக்கியது பாரதிராஜா தான். என் மனைவிக்கு விழா நடத்தினால் நான் பதவியை தவறாக பயன்படுத்துவது போல இருக்கும் என ஆர்.வி.உதயகுமாரிடம் கூறினேன். தயக்கத்திற்கு பிறகு ஒரு வாரம் காத்திருந்து பாரதிராஜாவிடம் கேட்டேன், உடனே ஏற்றுக் கொண்டார்.

வெற்றி என்பது பெண்ணியத்திற்கு கடினமானது, கணவனாக இருந்ததால் ரோஜாவின் வலி, போராட்டம் குறித்து அறிவேன். நடிகையாகிவிடுவது எளிது, அரசியல்வாதியாவது சாதாரணமல்ல. ரோஜா தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபட விரும்பினார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ரோஜா ஒரு விபத்தாக அரசியலுக்கு சென்றார். ரோஜாவால் கொஞ்ச நாள் தான் அரசியலில் இருக்க முடியும் என்று நினைத்தேன்.

KRK Review: காத்து வாக்குல ரெண்டு காதல் முதல் விமர்சனத்தை கூறிய உதயநிதி ஸ்டாலின்!

இரண்டு முறை தோற்றுப் போன போதும் அரசியலில் தோல்வியுடன் ரிட்டையர் ஆக மாட்டேன் என்று கூறினார். ரோஜாவின் திரைப்பிரபலம் காரணமாக சொந்த கட்சியிலும், எதிர் கட்சியிலும் விரோதிகள் உருவாகினர். எனவே இரு முறை தோற்றார் ரோஜா. அரசியல் ஒரு சிண்டிகேட் என்று கூறினேன். அதையும் மீறி 2014-ல் முதல் முறை ரோஜா வெற்றி பெற்றார்.

கலைக்கு மொழி தடையில்லை - அஜய் தேவ்கனுக்கு ரம்யா ஸ்பந்தனா பதிலடி!

ஒரு பெண் கலைத்துறையில் பயணத்தை தொடங்கி, அரசியலில் வென்றதன் விழாவாக இது நடைபெறுகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண விதையாக இருந்தவர், கடின உழைப்பால் இந்தளவு உயர்ந்துள்ளார்” என்றார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Director bharathiraja