Home /News /entertainment /

அதிமுகவில் இணைந்து செயல்பட உள்ளேன் - ஓபிஸை சந்தித்த பின் பாக்யராஜ் அறிவிப்பு

அதிமுகவில் இணைந்து செயல்பட உள்ளேன் - ஓபிஸை சந்தித்த பின் பாக்யராஜ் அறிவிப்பு

பாக்யராஜ்

பாக்யராஜ்

அதிமுகவில் இணைந்து செயல்பட உள்ளதாக ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பின் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன், திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ் மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ், அதிமுகவில் இணைந்து செயல்பட உள்ளேன். கட்சி ஒன்றாக இணைந்து செயல்பட என்னால் முடிந்ததை செய்வேன். எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வேண்டிய காலம் வரும் போதும் சந்திப்பேன்.அனைவரும் ஒன்று சேர்வார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.

    மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா மக்களுக்காக பாடுபட்டனர். அதன் பிறகு பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என தொடர்ச்சியாக கட்சியின் பெயர் மக்களிடம் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. திருஷ்டி பரிகாரமாக ஒரு சோதனை வந்துள்ளது. மீண்டும்  பழைய பலத்துடன் கட்சி இருக்க வேண்டும் என நினைத்து ஓ. பன்னீர்செல்வம் அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும் நானும் அதையே தான் கூறி வருகிறேன்.

    மீண்டும் அனைவரும் ஒன்றுபட்டு பழையபடி  தொண்டர்களுக்கு புத்துணர்வு கிடைக்கும் வகையில் பலம் பெறும். அதற்கு என்னை இணைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டுமோ எப்படி செயல்பட வேண்டும் அப்படி செயல்பட தயாராக இருக்கிறேன். எம்ஜிஆர் கட்சியை காப்பாற்றும் வகையில், சின்ன ஒரு தொண்டனாக இவர்கள் உடன் இருந்து கட்சி பணிகளை ஆற்ற தயாராக இருக்கிறேன்.

    Also Read : ஜெ. மரணம்.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முழு அறிக்கை தமிழக அரசிடம் நாளை தாக்கல்

    அனைவரும் ஒன்று சேர்வார்கள் கொஞ்சம் நேரம் எடுக்கும். அதிமுகவில் இருந்தவன் தான். இனி முறையாக இணைந்து செயல்படுவேன். கட்சி நன்றாக இருக்க வேண்டும். இதை எடப்பாடி பழனிசாமி தராப்பிடம் முடிந்தால் நானும் நேரடியாக சென்று தெரிவிப்பேன். அனைவரும் இணைவதற்கு என்னால் ஆன முயற்சிகளை செய்வேன் என்று பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

    எம்ஜிஆரின் கலை உலக வாரிசு என அறிவிக்கப்பட்டவர் பாக்யராஜ். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜானகி அணியை ஆதரித்தார். அதன் பின்னர் தனிக்கட்சி தொடங்கிப் பார்த்தார். அதுவும் சரியாக அமையாத நிலையில் திமுகவில் இணைந்தார். கடந்த ஓராண்டாக அதிமுக தொடர்பாக கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பின் தனது முடிவை பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: ADMK, Bhagyaraj

    அடுத்த செய்தி