விஜய் பேச்சைக் கேட்க காத்திருக்கிறேன் - மலையாள நடிகர்

விஜய் பேச்சைக் கேட்க காத்திருக்கிறேன் - மலையாள நடிகர்
விஜய்
  • Share this:
மாஸ்டர் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சைக் கேட்க ஆவலுடன் காத்திருப்பதாக மலையாள நடிகர் அஜு வர்கீஸ் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் நடந்து வருகிறது. சூட்டிங்கில் இருந்த விஜயை வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியது முதல் மாஸ்டர் களம் பரபரப்பானது.

அதைத்தொடர்ந்து நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியதைக் கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதும் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் தனது படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் விஜய், இம்முறை என்ன பேசப்போகிறார், வருமான வரித்துறையினரின் சோதனை, அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் குறித்தெல்லாம் அவர் பேசுவாரா, அதுதொடர்பான குட்டிக்கதை சொல்வாரா என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையில் இருப்பவர்கள் கூட விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பில் இருப்பதை தங்களது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆடை பட இயக்குநர் ரத்னகுமார், மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்காக காத்திருக்கிறேன் என்று ட்வீட் செய்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து மலையாள நடிகர் அஜு வர்கீஸ், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சைக் கேட்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற எதிர்பார்ப்புகளுக்கு மாஸ்டர் இசைவெளியீட்டு விழாவில் விடை சொல்வாரா விஜய்?.. பொறுத்திருந்து பார்க்கலாம்.
First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading