பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் குறித்து ‘மாஸ்டர்’ பட இயக்குநர் விளக்கம்!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் குறித்து ‘மாஸ்டர்’ பட இயக்குநர் விளக்கம்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
  • Share this:
சமூகவலைதளங்களில் திரைத்துறை பிரபலங்களின் போலி அக்கவுண்டுகள் உலா வரும் நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் எந்தெந்த சமூகவலைதளத்தில் இருக்கிறேன் என்பதை அறிவித்துள்ளார்.

‘மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கார்த்தி நடித்த ‘கைதி’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு அந்தப் படமும் வெற்றியைக் கொடுத்தது. இதையடுத்து தற்போது விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இம்மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கின் காரணமாக தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்றும் படம் குறித்த அப்டேட்கள் கிடைக்குமா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ட்விட்டர் பக்கம் வந்த லோகேஷ் கனகராஜ், “நான், ஃபேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் இல்லை. நான் ட்விட்டரில் மட்டும்தான் இருக்கிறேன். மற்றதெல்லாம் போலி கணக்குகள்” என்று கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜின் இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள், மாஸ்டர் ட்ரெய்லர் எப்போது வெளிவரும், 14-ம் தேதிக்கு மேல் தான் மாஸ்டர் திரைப்படத்தின் அப்டேட் வெளியிடுவீர்களா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க: Exclusive | 144 தடை உத்தரவு நீட்டிப்பா...? அரசுத் தரப்பு விளக்கம் என்ன...?


First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading