எனக்கு கொரோனா பாதிப்பா? - நயன்தாரா விளக்கம்

நடிகை நயன்தாரா கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதுகுறித்து அவரது மக்கள் தொடர்பாளர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

எனக்கு கொரோனா பாதிப்பா? - நயன்தாரா விளக்கம்
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
  • Share this:
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதில் உண்மையில்லை என்றும், முழுக்க முழுக்க அது ஒரு வதந்தி என்றும் நயன்தாராவின் மக்கள் தொடர்பாளர் குழு தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் திரைபிரபலங்கள் வீட்டில் முடங்கியுள்ளனர்.

படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று திரும்பிய பிரபலங்களும் தங்களது வீடுகளில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதில் உண்மையில்லை என்றும், முழுக்க முழுக்க அது ஒரு வதந்தி என்றும் நயன்தாராவின் மக்கள் தொடர்பாளர் குழு தெரிவித்துள்ளது.


மேலும் இதுகுறித்து நாம் விசாரித்த போது, கடைசியாக ஹைதராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நயன்தாரா ஆரம்பம் முதலே தன்னுடைய பாதுகாப்புக்காவும், பிறருடைய பாதுகாப்பையும் கருதி தனி மனித விலகலை கடைபிடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: எனக்கு கவலையில்லை... ட்விட்டரிலிருந்து வெளியேறிய நடிகை சோனாக்‌ஷி சின்ஹா

மேலும் தற்சமயம் நெட்ஃபிளிக்ஸ் குறும்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கும் விக்னேஷ் சிவன், அந்த பணிகளை கூட அலுவலகத்தில் இருந்தவாறே செய்து வருவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
First published: June 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading