ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘ஆதார்’ திரைப்படம் விமர்சன ரீதியில் வெற்றியடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ – கருணாஸ்

‘ஆதார்’ திரைப்படம் விமர்சன ரீதியில் வெற்றியடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ – கருணாஸ்

ஆதார் படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு

ஆதார் படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு

ஆதார் படத்தில் ஒரு சாமானியனின் வாழ்க்கையில் அதிகாரம் எந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை படமாக்கியிருந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆதார் திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றியடையவில்லை என்றாலும் விமர்சன ரீதியில் வெற்றியடைந்தது மகிழ்ச்சி அளிப்பதாக கருணாஸ் கூறியுள்ளார்.

கருணாஸ் நடிப்பில் ராம்நாத் இயக்கத்தில் ஆதார் என்ற படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் அருண்பாண்டியன், இனியா, ரித்விகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஒரு சாமானியனின் வாழ்க்கையில் அதிகாரம் எந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை  படமாக்கியிருந்தனர். தமிழகத்தில் ஆதார் படத்தை கணிசமான திரையரங்குகளில் வெளியிட்டனர். ஆனால் வசூல் ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

Mahalakshmi Ravindar: மகாலட்சுமியின் கனவு நனவானது... விசேஷத்தைப் பகிர்ந்த ரவீந்தர்!

இருந்தாலும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்றது. அது ஆதார் படத்திற்கான தொலைக்கட்சி உரிமம், டிஜிட்டல் உரிமம் விற்பனைக்கு வழியை ஏற்படுத்திகொடுத்துள்ளது. இந்த நிலையில் கருணாஸ் உள்ளிட்ட  படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கருணாஸ், தற்போதை சூழலில் எதையும் மறைக்க முடியாது.

இந்தப் படத்திற்கான வசூல் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் படத்திற்கு நல்ல விமர்சனங்களும், பாராட்டும் கிடைத்தது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என கூறினார்.

பொன்னியின் செல்வன் படத்தில் வாய்ப்பு கேட்ட ரஜினி, மறுத்த மணிரத்னம் - காரணம் என்ன தெரியுமா?

இதன் காரணமாக படத்தின் தயாரிப்பாளரிடம் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமைக்காக பேசுகின்றனர் எனவும் தெரிவித்தார். மேலும் ஆதார் திரைப்படம் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருது வென்றுள்ளது. இதன் பிறகும் பல திரைப்பட விழாக்களில் திரையிட உள்ளனதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

Published by:Musthak
First published:

Tags: Aadhar