நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன் - லாரன்ஸ்

நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன் - லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்
  • Share this:
தான் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாக ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் பட இசைவெளியீட்டு விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், ரஜினிகாந்தின் அரசியல் வருகையை தொடர்ந்து விமர்சித்து வரும் சீமானின் பேச்சுக்கு நாட்டுக்கு நல்லதல்ல என்றார்.

மேலும் ரஜினிகாந்தின் பிறந்தநாள் விழா ஒன்றில் பேசிய லாரன்ஸ், சீமாம் மட்டும் தமிழ்த்தாயின் மூத்த பிள்ளையா? நாங்கள் எல்லாம் அமெரிக்கர்களுக்கு பிறந்தவர்களா? நாங்களும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் தான் என்றார். லாரன்ஸின் இதுபோன்ற பேச்சுகள் சீமான் ஆதாரவாளர்களை கோபமடையச் செய்தது. இதனால் அவர்கள் லாரன்ஸை விமர்சித்து வந்தனர்.


படிக்க: பிகில் பட வெற்றியிலும் இடம்பிடித்த வெங்காயம்

இந்நிலையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் லாரன்ஸ், நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன். இதுவரை என்னைத்தான் தவறாக பேசிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது தாய் தந்தையரைப் பற்றியும் மிக தவறாக பேசுகிறார்கள்!

மொழியை ஒரு போர்வையாக பயன்படுத்திக்கொண்டு தவறாக பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும். நான் ஒரு தனி மனிதன். எனக்கென்று தனிக் கூட்டமில்லை. நான் படிக்காதவன்.ஒரு தனி மனிதனாய் நின்று, ‘அன்புதான் தமிழ்’ என்கிற, அரசியல் சார்பற்ற ஒரு சேவை அமைப்பை தொடங்குகிறேன். இந்த அமைப்பின் மூலம்,தமிழரின் மாண்பையும், தமிழரின் பண்பையும், தமிழரின் அன்பையும், உலகறிய செய்வதே அதன் நோக்கம்.

‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண, நன்னயம் செய்துவிடல்’ என்பது திருக்குறள் அதை பின்பற்றியே எதிரிக்கும் உதவி செய். பிறர் துன்பங்களை உன் துன்பமாக நினை. நாமெல்லாம் உருவத்தால்தான் வெவ்வேறு. உள்ளத்தால் ஒன்றே.

படிக்க: தர்பார் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு - குஷியில் ரஜினி ரசிகர்கள்!

நான் துவங்கும் இந்த அறம் சார்ந்த சேவை அமைப்பிற்கு இந்த பிரபஞ்ச சக்தி துணை நிற்கட்டும். இறுதியாக ஒன்று. என்னை தவறாக பேசிக் கொண்டிருப்பவர்களும், அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும்,நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

First published: December 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading