• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • பிறப்பால் தமிழர் என்பதால் கர்நாடகாவில் எனக்கான அங்கீகாரம் மறுக்கப்படுகிறது - சர்வதேச திரைப்பட விழாவில் சாதித்த இயக்குநர் வேதனை

பிறப்பால் தமிழர் என்பதால் கர்நாடகாவில் எனக்கான அங்கீகாரம் மறுக்கப்படுகிறது - சர்வதேச திரைப்பட விழாவில் சாதித்த இயக்குநர் வேதனை

சர்வதேச திரைப்பட விழாவில் சாதித்த இயக்குநர் வேதனை

சர்வதேச திரைப்பட விழாவில் சாதித்த இயக்குநர் வேதனை

பதினாறு திரைப்படங்களை இயக்கி சர்வதேச அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட போதிலும் கர்நாடகாவில் புறக்கணிக்கப்படுவதாக இயக்குனர் கு.கணேசன் வேதனை தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இன்வெஸ்கோ மற்றும் அமெரிக்க திரைப்பட மையம் சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரம் திரைப்படங்கள் திரையிட பட்டது. இதில் குழந்தைகள் எவ்வாறு கடத்த படுகின்றனர்? அவர்கள் படும் துயரங்களையும் உண்மை சம்பவங்களுடன் தத்ரூபமாக காட்சி படுத்தப்பட்ட 'நம்ம மகு' என்ற திரைப்படம் முதலிடத்தை பெற்றது.

  கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவை சேர்ந்த கு.கணேசன். என்பவர் இயக்கிய இந்த திரைப்படம் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாவில் 23 சர்வதேச விருதுகளையும் பெற்றது. இந்த விருதினை பெற்ற குழுவினருக்கு அமெரிக்கா திரைப்பட ஜாம்பவான்கள் உயரிய மரியாதை யினை வழங்கினர். இது தமிழர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

  மேலும் இது பற்றி கூறிய அவர், என் தந்தையின் பூர்வீகம் திருவண்ணாமலை என்ற பேதிலும் கர்நாடகத் தமிழரான நான் பிறந்து வளர்ந்தது முழுவதுமே தலைநகரான பெங்களூரில் தான். சினிமா மற்றும் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட காரணமாக, சமூக அக்கறையை வெளிப்படுத்தும் 16 திரைப்படங்களை தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் இயக்கினேன். சமீபத்தில் நான் இயக்கிய "நம்ம மகு" என்ற குழந்தைகள் நலன் குறித்த திரைப்படம் 23 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

  Also Read :  ’பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து ரோஷினி ஹரிப்ரியன் விலகல்?

  இன்வெஸ்கோ மற்றும் அமெரிக்க திரைப்பட மையம் சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச திரைப்பட விழாவில் 1000-ம் படங்களில் போட்டி போட்டு இந்த படம் திரையிடப்பட்டு முதலாவது இடத்தை பிடித்துள்ளது அதில் குழந்தைகள் நலன் சார்ந்த பல்வேறு விஷயங்களை சமூக அக்கறையுடன் இத்திரைப்படம் வெளிப்படுத்தியுள்ளது. முதலாவதாக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

  ஆனாலும் இந்தத் திரைப்படத்தை கர்நாடக திரைத்துறையைச் கர்நாடக அரசு அங்கீகரிக்க வில்லை என்பது தமிழர் என்ற ஒரு காரணமாக கூட இருக்கலாம். கர்நாடகாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படத்தை திரையிட கூட அனுமதிக்கப்படவில்லை. இது எனக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை தந்தது. இதற்கு காரணம் பிறப்பால் தமிழர் என்பதால் கர்நாடகாவில் தனக்கான முக்கியத்துவம் மறுக்கப் படுகிறது. இதுபோன்று எவ்வளவு பிரச்சினைகள் சவால்கள் வந்தாலும் சமூக நலனுக்காக தொடர்ந்து இதுபோன்ற திரைப்படங்களை எடுத்துக் கொண்டு இருப்பேன்.

  Also Read : இயக்குநர் ஷங்கர் மருமகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

  மேலும் என்னுடைய சர்வதேச பாராட்டுகள் அனைவருக்கும் சென்று சேரவும் சிறந்த படைப்பு மக்களை சென்று சேரவும் இதனை வெளியிட பொருளாதாரத்தில் முன்னேறிய நல் உள்ளம் படைத்தவர்கள் உதவிட வேண்டுகிறேன். இது பற்றி கர்நாடகா முதல்வரை சந்தித்து திரைப்படம் வெளியாக உதவி கோர இருப்பதாக தெரிவித்த அவர், இத்திரைப்படத்தை தமிழில் மனிதம் என்ற பெயரில் தயார் செய்து சென்சார் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.விரைவில் திரையிட உள்ளதாகவும் விநியோகஸ்தர் முன்வந்தால் இப்படத்தை இலவசமாக திரையிட வழங்குவதாகவும் கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vijay R
  First published: