எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார்கள்.. கடந்து வந்துவிட்டேன் - நடிகை சோனா

நடிகை சோனா

சின்னத்திரையில் கால் பதிக்க முடிவு செய்துவிட்டார் நடிகை சோனா.

 • Share this:
  தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் கவர்ச்சி, காமெடி, குணசித்திர வேடம் என ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை சோனா. இவர் தமிழில் குசேலன், கோ, குரு என் ஆள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக த்ரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு மற்றும் வரலட்சுமி நடித்த சேஸிங் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

  சினிமா மட்டுமல்லாமல் சோனா Uniq என்ற பேஷன் கடையும் வைத்திருக்கிறார். தற்போது இவர் சின்னத்திரையில் கால் பதிக்க முடிவு செய்துவிட்டார். அண்மையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்துள்ளாராம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுகுறித்து பேசிய சோனா, சினிமாதான் எனக்கு அடையாளம். நல்ல கதாப்பாத்திரம் அமைந்ததால் “அபி டெய்லர்ஸ்” சீரியலில் நடிக்கிறேன். தமிழ், மலையாளப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறேன்.

  Must Read : ‘கொரோனா வைரஸ்க்கு டெல்டா பெயரா.. உலக சுகாதார நிறுவனத்தின் முடிவை எதிர்ப்பது ஏன்?’ -ம.நீ.ம மாநில செயலாளர் விளக்கம்

  சில வருடங்களுக்கு முன் எனக்கும்  பாலியல் தொல்லை நடந்தது. நமக்கான உரிமைக்கு நாம்தான் போராட வேண்டும். உங்களுக்கு நடந்தால் அதை வெளிப்படுத்துங்கள். உரிமைக்கு குரல் கொடுங்கள். எதுவும் நடக்கவில்லையெனில் அதை கடந்து செல்லுங்கள். வாழ்க்கை பெரியது. எனக்கு நடந்ததை கடந்து வந்துவிட்டேன். அது தான் நல்லது'' என்றார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: