Home /News /entertainment /

‘விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு இருக்கிறது’ –பிறந்த நாள் விழாவில் ஜெயம் ரவி பேச்சு

‘விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு இருக்கிறது’ –பிறந்த நாள் விழாவில் ஜெயம் ரவி பேச்சு

பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ஜெயம் ரவி.

பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ஜெயம் ரவி.

என்னுடைய திரைப்படங்களில் இருக்கும் நல்ல விஷயம் மற்றும் தவறுகள் என அனைத்தையும் சுட்டிக் காட்டுங்கள். – ஜெயம் ரவி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருப்பதாக நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய 42 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.  இதை முன்னிட்டு சென்னையில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெயம் ரவி பேசியதாவது-

நான் சினிமாவிற்கு வந்து 20 ஆண்டுகளாகிறது.  எனக்குப் பிறகு வந்தவர்கள் 40, 45 திரைப்படங்கள் நடித்து விட்டனர். ஆனால் நான் 25 திரைப்படங்கள் மட்டுமே நடித்துள்ளேன்.

அதற்கு காரணம் படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல, நல்ல திரைப்படங்களை தரமான திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதுதான்.  இதையே என்னுடைய தந்தை எடிட்டர் மோகனும் கூறினார்.

தனுஷின் நானே வருவேன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு தள்ளிவைப்பு…

தரமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் தோல்வி படங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக கருதுகிறேன். அதுவும் ஜெயம் திரைப்படத்தை முடித்துவிட்டு 8 மாதங்கள் வீட்டில் இருந்தேன். அப்போது என்னுடைய தந்தை, அதிக படங்கள் நடிப்பது முக்கியமல்ல, நல்ல திரைப்படங்களில் நடிக்க வேண்டியதுதான் அவசியம் என கூறினார்.

நல்ல படங்களுக்காக காத்திருப்பது தவறில்லை எனவும் கூறினார். என்னுடைய வளர்ச்சிக்கு ரசிகர்களும்,  செய்தியாளர்களும் பக்க பலமாக உள்ளனர்.

விக்ரம் 100வது நாள்.. ரசிகர்களுக்கு ஆடியோ மூலம் சர்ப்ரைஸ் கொடுத்த கமல்ஹாசன்!

எந்த விமர்சனமாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவம் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் இருக்கிறது. அதன் காரணமாக என்னுடைய  திரைப்படங்களில்  இருக்கும் நல்ல விஷயம் மற்றும் தவறுகள் என அனைத்தையும் சுட்டிக் காட்டுங்கள். என்னுடைய அப்பா, அம்மா, அண்ணன் மோகன் ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். ஜெயம் ரவி தனது பிறந்தநாள் விழாவை பிரேமகதா இல்லத்தை சேர்ந்த குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
Published by:Musthak
First published:

Tags: Actor Jayam Ravi

அடுத்த செய்தி