Home /News /entertainment /

மாலை போல் விக்ரம் பட டிக்கெட்டுகளுடன் ஐதராபாத் ரசிகர்… வைரலாகும் புகைப்படம்

மாலை போல் விக்ரம் பட டிக்கெட்டுகளுடன் ஐதராபாத் ரசிகர்… வைரலாகும் புகைப்படம்

விக்ரம் பட டிக்கெட்டுகளுடன் ரசிகர்

விக்ரம் பட டிக்கெட்டுகளுடன் ரசிகர்

மல்டி ஹீரோக்கள் ஒரே படத்தில் இணைந்துள்ளதால் அவர்களது ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் டிக்கெட்டுகளுடன் ஐதராபாத் ரசிகர் ஒருவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழகம் உள்பட இந்திய மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் விக்ரம் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சிறப்பு தோற்றத்தில் சூர்யா இடம்பெற்றுள்ளார். மல்டி ஹீரோக்கள் ஒரே படத்தில் இணைந்துள்ளதால் அவர்களது ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க - தாத்தா முன்பு அவரது வசனத்தை பேசி அசத்திய செந்தில் பேத்தி!

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் டிமாண்டாக உள்ளன.

இதையும் படிங்க - 36 வருடங்களுக்கு முன்பு வெளியான கமலின் விக்ரம் வசூல் எவ்வளவு தெரியுமா?

விக்ரம் படம் வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அடுத்தடுத்த சனி, ஞாயிற்று கிழமைகளிலும் படம் ஹவுஸ்ஃபுல்லாக அமையும் என சினிமா வர்த்த நிபுணர்கள் கணித்துள்ளனர்.



இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த ரசிகர் ஒருவர் விக்ரம் படத்திற்கான 60 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளார். அவற்றை மெத்தையில் மாலை போல் அமைத்து, அதற்குள் சாய்ந்தவாறு ஃபோட்டோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.



இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விக்ரம் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக கமல் தனியொரு நபராக கேரளா, ஐதராபாத், பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று ப்ரஸ் மீட்டை நடத்தியுள்ளார். படத்தில் சூர்யா இடம்பெறும் இறுதிக் காட்சி, படத்தை அடுத்த பாகத்திற்கு கொண்டு செல்லும் என்று கமல் தெரிவித்துள்ளதால் படத்தின் மீதான சுவாரசியம் அதிகரித்துள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Kamal Haasan

அடுத்த செய்தி