• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Samantha: அவதூறு வழக்கு தொடர்ந்த சமந்தா... கோபமடைந்த நீதிபதி

Samantha: அவதூறு வழக்கு தொடர்ந்த சமந்தா... கோபமடைந்த நீதிபதி

சமந்தா

சமந்தா

'சம்பந்தப்பட்ட சேனல்கள் மீது வழக்குத் தொடர்வதை விட, அவர்களை நடிகை சமந்தா மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கலாம்'.

  • Share this:
    சமந்தாவின் வழக்கால் ஐதராபாத் நீதிமன்ற நீதிபதி கோபமடைந்துள்ளார்.

    படங்களில் ஒன்றாக நடித்து காதலில் விழுந்த சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.

    இந்து - கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நாகசைத்தன்யா - சமந்தாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இதனிடையே தாங்கள் இருவரும் திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக, இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தனர். இவர்கள் பிரிவுக்கு காரணமாக சமந்தாவை குற்றம்சாட்டி, பல செய்திகள் இணையத்தில் வலம் வந்தன. இதையடுத்து தனது தனிப்பட்ட விவாகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்றும், எந்த விதமான எதிர்மறை விஷயங்களும் தன்னை பாதிக்காது என்றும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார் சமந்தா.

    இந்நிலையில், விவாகரத்து விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறாக தகவல்களை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஐதராபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, 'சம்பந்தப்பட்ட சேனல்கள் மீது வழக்குத் தொடர்வதை விட, அவர்களை நடிகை சமந்தா மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கலாம். பிரபலங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை பொது களத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள், பின்னர் அவர்கள் அவதூறு வழக்குகளைத் தாக்கல் செய்கிறார்கள்' என்று கூறினார்.

    இதையடுத்து மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று சமந்தா-வின் வழக்கறிஞர் முரளி நீதிமன்றத்தில் கோரியதை அடுத்து, கோபமடைந்த கூடுதல் மாவட்ட நீதிபதி, "இந்த மனு சரியான நேரத்தில் விசாரணைக்கு வரும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று இல்லை. சமந்தா-வின் வழக்கை, நடைமுறைப்படி நீதிமன்றம் விசாரிக்கும்" என்று கூறியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: