முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மலையாள சினிமாவில் கோடிக்கணக்கில் கருப்பு பணம்... ஐடி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மலையாள சினிமாவில் கோடிக்கணக்கில் கருப்பு பணம்... ஐடி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மாதிரி படம்

மாதிரி படம்

மலையாள சினிமா பிரமுகர்கள் பலருக்கு சொந்தமான இடங்களில் கடந்த டிசம்பர் மாதம் வருமானவரித் துறை அதிகாரிகள் 42 இடங்களில் சோதனை நடத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மலையாள சினிமாவில் கருப்பு பணம் பல கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித் துறையினர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாள சினிமாவில் கருப்பு பணப் புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் வருமானவரித்துறை அதிகாரிகள் 42 இடங்களில் சோதனை நடத்தினர்.

கேரளா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த சோதனை அப்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சோதனைக்கு பின்னர் அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் சோதனை குறித்த விபரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இதன் அடிப்படையில் சுமார் ரூ. 225 கோடி அளவுக்கு கருப்பு பணம் மலையாள சினிமாவில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன.

அந்த வகையில் வருமான வரித்துறைக்கு 72 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக முன்னணி நடிகர்கள் சிலரிடம் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேபோன்று மலையாள படங்களை வெளிநாடுகளில் விநியோகித்ததன் மூலம் மோசடி நடந்துள்ளதாகவும் வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு மோசடி நடந்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக துபாய் மற்றும் கத்தார் நாடுகளில் இந்த மோசடி நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

First published:

Tags: Mollywood