ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘இதயம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அமைதியும், நிம்மதியும் தேவை’ - யுவன் சங்கர் ராஜா அறிவுரை

‘இதயம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அமைதியும், நிம்மதியும் தேவை’ - யுவன் சங்கர் ராஜா அறிவுரை

யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜா

பணம், வீடு, சொத்து என தேடி ஓடி இறுதியில் மனநிம்மதியை இழந்து விடுகிறோம் – யுவன் சங்கர் ராஜா

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மனித இதயம் நன்றாக இருக்க அமைதியும்,  நிம்மதியும் தேவைப்படுகிறது என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.

  லயோலா கல்லூரியும் பிரசாந்த் மருத்துவமனையும் இணைந்து இளம் இதயங்களை காப்போம் என்ற திரைப்பட விழாவை நடத்துகின்றனர்.  தற்போதைய காலகட்டத்தில் மிக இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது.

  எனவே, இளைஞர்கள் தங்கள் இதயத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த குறும்பட விழாவை நடத்துகின்றனர்.  இதற்கான தொடக்க விழா சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. அந்த விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,  ஒளிப்பதிவாளர் ஓம்.பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

  நடிகர் விஷால் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல்… காவல் நிலையத்தில் புகார்

  அதில் பேசிய யுவன் சங்கர் ராஜா ஒரு இதயம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அமைதியும், நிம்மதியும் தேவை. ஆனால் பணம், வீடு, சொத்து என தேடி ஓடி இறுதியில் மனநிம்மதியை இழந்து விடுகிறோம் என கூறினார்.

  Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் மகளுக்கு மணிரத்னம் கொடுத்த வாய்ப்பு!

  எனவே,  இதயத்தை பாதுகாக்க அமைதியும், நிம்மதியும் தேவை. இதை முன்வைத்து இந்த குறும்பட விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.  மேலும் போட்டியாளர்களுடன் இணைந்து தன் இசையில் உருவான ஒரு பாடலை பாடி மகிழ்ந்தார் யுவன் சங்கர் ராஜா.

  Published by:Musthak
  First published:

  Tags: Yuvan Shankar raja