வலிமை நாயகியின் ஹாலிவுட் பட அப்டேட்

ஹியூமா குரேஷியுடன் ஸாக் ஸ்னைடர்

அஜித்தின் வலிமை படத்தில் நாயகியாக நடித்துள்ளார் ஹுமா குரோஷி. இவரது முதல் ஹாலிவுட் படம், ஆர்மி ஆஃப் தி டெட். இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியிருக்கும் நிலையில், படம் மே மாதம் வெளியாகிறது.

  • Share this:
ஆர்மி அஃப் தி டெட் படத்தை இயக்கியிருப்பவர் ஸாக் ஸ்னைடர். ஹாலிவுட்டின் முக்கிய இயக்குநர். 300, மேன் ஆஃப் ஸ்டீல், பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் - டான் ஆஃப் ஜஸ்டிஸ், ஜஸ்டிஸ் லீக் போன்ற பிரமாண்டங்களை இயக்கியவர். ஸாக் ஸ்னைடர்ஸ் ஜஸ்டிஸ் லீக் என்ற 4 மணிநேரம் ஓடக்கூடிய திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. இவரது அடுத்தப் படம்தான் ஆர்மி ஆஃப் தி டெட்.

லாஸ் வேகாஸ் நகரம் ஸாம்பிகளால் பீடிக்கப்பட்டிருக்கும் நிலையில், மிகப்பெரிய திருட்டு ஒன்றுக்கு திட்டமிடுகின்றனர். ஸாம்பிக்கள் மத்தியில் அந்த திருட்டை எப்படி நடத்தி முடிக்கிறார்கள் என்பதே இப்படத்தின் ஒன்லைன் கதை.



இதில் முக்கிய வேடத்தில் ஹுமா குரோஷி நடித்துள்ளார். இது அவரது முதல் ஹாலிவுட் திரைப்படம். மே 21 திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் அதேநேரம், நெட்பிளிக்ஸிலும் வெளியாக உள்ளது.
Published by:Sheik Hanifah
First published: