Home /News /entertainment /

பெண்களை பாடி ஷேமிங் செய்பவர்களுக்கு பாடம் எடுக்க போகும் ரஜினி பட நாயகி!

பெண்களை பாடி ஷேமிங் செய்பவர்களுக்கு பாடம் எடுக்க போகும் ரஜினி பட நாயகி!

ஹியூமா குரேஷி

ஹியூமா குரேஷி

”உருவக் கேலி என்பது அனைத்து பெண்களுக்கும் பொதுவானதாக மாறிவிட்டது., ஒவ்வொரு நாளும் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கிறோம்.”

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    உருவக் கேலி, உடல் எடையை முன்வைத்து உருவாகியுள்ள ’டபுள் எக்ஸல்' படம் குறித்து நடிகை ஹியூமா குரேஷி பல விஷயங்களை ஷேர் செய்துள்ளார்.

    சினிமா துறையில் மட்டுமில்லை அன்றாட வாழ்விலும் பெண்களுக்கு எதிரான உருவக் கேலிகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. குண்டு, ஒல்லி என தொடங்கி நேரடியான கேலி, கிண்டல், சுற்றி வளைத்து தாக்கும்  பாலிஷ் கேலிகள் என உருவ கேலிகள் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன. இவை எல்லாவறையும் பற்றி பேசும் படமாக தான் வெளிவரவுள்ளது ’டபுள் எக்ஸல்'. சத்ரம் ரமணி இயக்கத்தில் ஹ்யூமா குரேஷி, சோனாக்‌ஷி சின்ஹா, ஜாகீர் இக்பால் நடித்து இருக்கும் இந்த படம் உருவக் கேலி, உடல் எடையை முன்வைத்து உருவாகப்பட்டுள்ளது.

    அடுத்த லெவலுக்கு சென்ற சூப்பர் சிங்கர் பிரியங்கா! விஷயம் தெரியுமா?

    இந்த படத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகை ஹியூமா குரேஷி உருவக் கேலி ஒருவரின் நம்பிக்கையை முழுமையாக சிதைப்பதாக தெரிவித்துள்ளார். ரஜினி நடித்த காலா, அஜித்தின் வலிமை படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமான ஹியூமா குரேஷி
    பாலிவுட்டில் மிகவும் போல்ட் ஹீரோயினாக வலம் வருகிறார். நீண்ட நாட்களாக பெண்கள் பிரச்சனைகள் பற்றியும் பேசும் படத்தில் நடிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தவருக்கு ’டபுள் எக்ஸல்' படத்தின் கதை கேட்டவுடனே பிடித்து விட்டதாம்.

    இதுக் குறித்து பேசியுள்ள ஹியூமா குரேஷி “ மக்களின் மனநிலையில் மாற்றங்களை கொண்டுவர விரும்புகிறோம். அதன் வெளிப்பாடு தான் பெண்களின் உருவக்கேலி குறித்து பேசும் ’டபுள் எக்ஸல்’. உருவக் கேலி என்பது அனைத்து பெண்களுக்கும் பொதுவானதாக மாறிவிட்டது., ஒவ்வொரு நாளும் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கிறோம்.. இந்தப் பிரச்னையை மையப்படுத்திய திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம்.

    பூஜை அறையில் கூட ஃபோட்டோவுக்கு போஸ்.. கேமரா அழகி ஷிவானி!

    உருவக்கேலி குறித்த அனைத்து விஷயங்களையும் இதில் பேசியுள்ளோம். கண்டிப்பாக மக்களின் மனநிலையில் மாற்றத்தை கொண்டு வருவோம் என நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bollywood, Kaala, Kollywood, Rajinikanth

    அடுத்த செய்தி