Valimai: சென்னையில் ரசிகர்களுடன் வலிமை படம் பார்த்த ஹுமா குரோஷி, கார்த்திகேயா, போனிகபூர்
Valimai: சென்னையில் ரசிகர்களுடன் வலிமை படம் பார்த்த ஹுமா குரோஷி, கார்த்திகேயா, போனிகபூர்
ஹுமா குரோஷி, கார்த்திகேயா, போனிகபூர்
Valimai: சென்னை ரோகிணி வளாகத்தில் அமைந்துள்ள திரையரங்கில் இன்று காலை வலிமை படத்தின் நாயகி ஹுமா குரோஷியும், வில்லனாக நடித்திருக்கும் கார்த்திகேயாவும், படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரும் உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து வலிமையை கண்டு ரசித்தார்கள்.
வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சென்னையில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டுகளித்துள்ளார்கள் நடிகை ஹுமா குரோஷியும், நடிகர் கார்த்திகேயாவும், படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரும்.
இன்று இந்தியா முழுவதும் வலிமை வெளியாகி உள்ளது. ரசிகர்கள் உற்சாகமாக படத்தைக் கண்டு ரசித்து வருகிறார்கள். அதிகாலை காட்சிகளுக்கு தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் திருவிழா கூட்டத்தை பார்க்க முடிந்தது. ரசிகர்களுடன் அமர்ந்து முதல் நாள் முதல் காட்சியை வலிமை படக்குழு பார்த்துள்ளது.
சென்னை ரோகிணி வளாகத்தில் அமைந்துள்ள திரையரங்கில் இன்று காலை வலிமை படத்தின் நாயகி ஹுமா குரோஷியும், வில்லனாக நடித்திருக்கும் கார்த்திகேயாவும், படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரும் உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து வலிமையை கண்டு ரசித்தார்கள்.
வலிமையின் முதல்பாதி மிகச் சிறப்பாக இருப்பதாகவும், இரண்டாம்பாதி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வினோத்தின் முதல் இரு படங்களான சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று அளவுக்கு வலிமை படத்தின் கதையும் திரைக்கதையும் கச்சிதம் கொள்ளவில்லை என்பது விமர்சகர்களின் முதல்கட்ட பார்வையாக உள்ளது.
படத்தின் சண்டைக் காட்சிகள்தான் அதிகம் பேசப்படுகின்றன. சண்டை காட்சிகள் படத்தை காப்பாற்றும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.
முதல்நாள் காட்சியில் இதுவரையான அஜித்தின் அனைத்து படங்களின் வசூலையும் வலிமை முறியடிக்கும் என்று திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஓப்பனிங் வசூலில் வலிமை சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.