ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

முன்னணி நடிகர்களுக்கு இணையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பிரமாண்ட கட்-அவுட்…

முன்னணி நடிகர்களுக்கு இணையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பிரமாண்ட கட்-அவுட்…

லோகேஷ் கனகராஜுக்கு வைக்கப்பட்ட கட் அவுட்

லோகேஷ் கனகராஜுக்கு வைக்கப்பட்ட கட் அவுட்

Lokesh Kanagaraj : கோவையை சேர்ந்த 36 வயதாகும், லோகேஷ் பி.எஸ்.ஜி. கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி படித்து, பின்னர் வங்கியில் பணியாற்றியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

முன்னணி நடிகர்களுக்கு இணையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்கள் பிரமாண்ட கட் அவுட் வைத்துள்ளனர். இதுதொடர்பான ஃபோட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

தொடர்ச்சியாக 4 படங்களை ஹிட் கொடுக்கும் இயக்குனர்கள் மிக குறைவாகவே இருப்பார்கள். அவர்களில் இளம் மற்றும் அதீத திறமை கொண்ட லோகேஷ் கனகராஜும் ஒருவர்.

இவரது இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த விக்ரம் திரைப்படம் 90 சதவீதத்திற்கும் அதிகமாக பாசிடிவ் விமர்சனங்கள் பெற்றுள்ளது. கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க - விஜய் பிறந்த நாளையொட்டி வெளியாகுமா தளபதி 66 டைட்டில்? லேட்டஸ்ட் அப்டேட்…

முன்னணி நடிகர்கள் பலர் இருந்தாலும் அவர்களுக்கான காட்சிகளை சரியான விதத்தில் இயக்குனர் லோகேஷ் அமைத்துள்ளார். அத்துடன், திரைக்கதை, டேட்டா டீட்டெய்ல், விறுவிறுப்பு, சஸ்பென்ஸ் என கமர்ஷியல் சினிமாவுக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் விக்ரம் படத்தில் லோகேஷ் சிறப்பாக கையாண்டுள்ளார்.

இந்நிலையில் விக்ரம் படத்தையொட்டி, லோகேஷ் கனகராஜுக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையாக பிரமாண்ட கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - ‘கனவு நிஜமானது...’ கமலுடன் நடித்தது குறித்து சூர்யா நெகிழ்ச்சி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் இந்த கட் அவுட் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோகேஷ் இதற்கு முன்பாக இயக்கிய மாஸ்டர், கைதி, மாநகரம் படங்களும் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் இயக்கவுள்ளார்.

தற்போது தளபதி 66 படப்பிடிப்பில் இருக்கும் விஜய், அதனை முடித்துக் கொண்டு லோகேஷ் உடன் இணைகிறார். கோவையை சேர்ந்த 36 வயதாகும், லோகேஷ் பி.எஸ்.ஜி. கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி படித்து, பின்னர் வங்கியில் பணியாற்றியுள்ளார்.

First published:

Tags: Lokesh Kanagaraj