ஷாருக்கான் நடித்துவரும் ஜவான் திரைப்படம், ஓடிடி தளத்தில் அதிக விலைக்கு வர்த்தகம் பேசப்பட்டுள்ளது.
இந்திப் படங்களில் இது மிகப்பெரும் பிசினஸ் என்று பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. சூப்பர் ஹிட் படங்கள் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்ட பின்னர். ஓடிடி தளங்களில் வெளியிடப்படுகின்றன.
இதற்காக கணிசமான தொகையை சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அளித்து படத்தை ஓடிடி நிறுவனங்கள் கையகப்படுத்தி கொள்கிறார்கள். சமீபகாலமாக படம் வெளியாவதற்கு முன்பாகவே ஒடிடி உரிமத்தை படத்தயாரிப்பு நிறுவனங்கள் வர்த்தகம் பேசி விடுகின்றன.
இதையும் படிங்க - கடற்கரையிலிருந்து ரொமான்டிக் போட்டோஸ் வெளியிட்ட பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ்!
இதனால் சினிமா வர்த்தகம் முன்பை விடவும் சிறப்பாக உள்ளது என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படத்தின் ஓடிடி உரிமை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த உரிமத்தை சுமார் 120 கோடி ரூபாய் கொடுத்து டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமை பிரபல நிறுவனமான நெட் பிளிக்ஸ்க்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - என் அறியாமையை உணர்கிறேன்... பஞ்சாங்க சர்ச்சை குறித்து விளக்கமளித்த மாதவன்!
அந்த வகையில் 120 கோடி ரூபாய் அளித்து நெட் ஃப்ளிக்ஸ் இந்த உரிமத்தை பெற்றுள்ளதாக இந்தி திரையுலகில் பேசப்படுகிறது. ஜவான் படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் ஜவான் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு மட்டும் ஷாருக்கானுக்கு பதான், ஜவான் மற்றும் டுங்கி ஆகிய 3 படங்கள் வெளியாக உள்ளன.
இந்த மூன்று படத்திற்கும் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.