Hrithik Roshan: விக்ரம் வேதா இந்தி ரீமேக்கை விட்டு வெளியேறும் ரித்திக் ரோஷன்?

ரித்திக் ரோஷன்

பிரிட்டன் டிவி சீரிஸான தி நைட் மேனேஜரை, இந்தியில் ரித்திக் ரோஷனை வைத்து எடுக்க டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

  • Share this:
    எந்த நேரத்தில் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார்களோ. முன்னே போனால் முட்டும், பின்னே சென்றால் உதைக்கும் கதையாக இடியாப்ப சிக்கலில் மாட்டியிருக்கிறது இந்தி விக்ரம் வேதா.

    புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா வெற்றி பெற்றது, அதனை இந்தியில் அவர்களே இயக்க முடிவு செய்தார்கள். இந்தியில் விஜய்சேதுபதி வேடத்தில் நடிக்க ரித்திக் ரோஷனை அணுகினர். அவர் பிஸியாக இருக்க, அமீர் கான் நடிப்பதாக முடிவானது. மாதவன் வேடத்தில் சயிப் அலிகான் நடிக்கிறார்.

    ஒரே படத்தில் இந்திய, சீன மார்க்கெட்டை பிடிக்க நினைத்த அமீர் கான், படத்தின் கதையை ஹாங்காங்குக்கு மாற்றும்படி அறிவுறுத்த, அப்படியே செய்தனர். ஆனால், கொரோனா வந்து அனைத்தையும் கலைத்துப் போட்டது. ஹாங்காங் இல்லையென்றால் படமும் வேண்டாம் என வெளியேறினார் அமீர் கான். கொரோனாவால் ஓய்வாக இருந்த ஹிர்த்திக் ரோஷன் உள்ளே வந்தார். வேலைகள் தடபுடலாக ஆரம்பித்த நிலையில், ஹிர்த்திக் ரோஷன் படத்திலிருந்து விலக தீர்மானித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஏன் இந்த திடீர் மாற்றம்?

    ரித்திக் ரோஷன் நடிப்பில் கடைசியாக வார் திரைப்படம் வெளியானது. தற்போது தீபிகா படுகோனுடன் பைட்டர் படத்தில் நடிக்கிறார். கொரோனாவால் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பும் தணிந்ததும் பைட்டர் படப்பிடிப்பு தொடங்கும். அதையடுத்து க்ரிஷ் 4 படத்தில் நடிக்கிறார். அத்துடன் பிரிட்டன் டிவி சீரிஸான தி நைட் மேனேஜரை, இந்தியில் ஹிர்த்திக் ரோஷனை வைத்து எடுக்க டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த மூன்று புராஜெக்ட்கள் வரிசைகட்டி நிற்பதால் விக்ரம் வேதா இந்திப் பதிப்பிற்கு கால்ஷீட் தர முடியாத சூழல். அதன் காரணமாகவே ஹிர்த்திக் விக்ரம் வேதாவிலிருந்து வெளியேறுகிறார் என்கிறார்கள் பாலிவுட்டில்.

    இன்னும் ஓரிரு நாளில் ஹிர்த்திக் உள்ளேயா இல்லை வெளியேயா என்பது தெரிந்துவிடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: