முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பதான் படம் இப்படித்தான் இருக்கு - ஷாருக்கான் படத்துக்கு ரிவியூ கொடுத்த ஹ்ரித்திக் ரோஷன்!

பதான் படம் இப்படித்தான் இருக்கு - ஷாருக்கான் படத்துக்கு ரிவியூ கொடுத்த ஹ்ரித்திக் ரோஷன்!

ஷாருக்கான் - ஹ்ரித்திக் ரோஷன்

ஷாருக்கான் - ஹ்ரித்திக் ரோஷன்

‘பதான்’ படத்தில் சல்மான் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஷாருக்கானின் பதான் படம் குறித்து தனது விமர்சனத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் ஹ்ரித்திக் ரோஷன். ‘பதான்’ படம் வெளியானதில் ஷாருக்கானின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இப்படம் அனைத்து இடங்களிலும் இருந்து அமோகமான வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து பதான் படத்தைப் பார்த்த ஹ்ரித்திக் ரோஷன் தனது விமர்சனத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.

‘என்ன ஒரு பயணம். நம்பமுடியாத பார்வை, இதற்கு முன்பு பார்த்திராத சில காட்சிகள், இறுக்கமான திரைக்கதை, அற்புதமான இசை, ஆச்சரியங்கள் மற்றும் திருப்பங்கள் அனைத்தும் சிறப்பு. சித் நீங்கள் இதை மீண்டும் செய்திருக்கிறீர்கள். ஆதி உங்கள் தைரியம் என்னை வியக்க வைக்கிறது. ஷாருக், தீபிகா, ஜான் மற்றும் ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார் ஹ்ர்த்திக் ரோஷன்.

‘பதான்’ படத்தில் சல்மான் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். சல்மான் மற்றும் ஷாருக்கான் இருவரையும் மீண்டும் திரையில் ஒன்றாகப் பார்த்தது பார்வையாளர்களுக்கு ஒரு முழுமையான விருந்தாக இருந்தது. இதற்கிடையில், பாக்ஸ் ஆபிஸில், 'பதான்' முதல் நாளில் ரூ.100 கோடி வசூலித்து அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. இப்படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Shah rukh khan