Home /News /entertainment /

துபாயில் தொடங்கிய இந்தி விக்ரம் வேதா...!

துபாயில் தொடங்கிய இந்தி விக்ரம் வேதா...!

சயிப் அலிகான்-ஹிர்த்திக் ரோஷன்

சயிப் அலிகான்-ஹிர்த்திக் ரோஷன்

விஜய் சேதுபதி வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்ற குழப்பம் தீவிரமான நிலையில், கால்ஷீட் இல்லை என்று வெளியேறிய ஹிர்த்திக் ரோஷனே நடிக்க சம்மதித்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
புஷ்கர் - காயத்ரி இயக்கிய விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக் இன்று தொடங்கியுள்ளது.

விக்ரம் வேதா திரைப்படம் 2017 ஜுலையில் வெளியானது. படம் அமோக வரவேற்பை பெற்றதுமே, படத்தை இந்தியில் ரீமேக் செய்வது என  முடிவானது. புஷ்கர் - காயத்ரியே இந்தி ரீமேக்கையும் இயக்குவது என தீர்மானித்தனர்

இந்தியில் விஜய் சேதுபதி நடித்த வேடத்துக்கு ஹிர்த்திக் ரோஷனை அணுகினர். மாதவன் வேடத்துக்கு சைப் அலிகான். ஹிர்த்திக் ரோஷன் கால்ஷீட் இல்லை என கைவிரிக்க, சைப் அலிகான் படத்தில் நடிக்க சம்மதித்தார். ஹிர்த்திக் ரோஷன் இல்லை என்று ஆனதும் அமீர் கானை அணுகினர். அவருக்கு கதை பிடித்திருந்தது. கதைக்களத்தை ஹாங்காங் என்று மாற்றினால் இந்தியா, சீனா என இரு நாடுகளிலும் படம் பெரிய அளவில் சென்றடையும் என சொல்ல, அதன்படியே திரைக்கதையை மாற்றி எழுதினர். எல்லாம் இறுதியான நிலையில், கொரோனா முதல் அலை வந்தது. ஹாங்காங்கில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல். ஹாங்காங் இல்லையென்றால் படமும் இல்லை என்று அமீர் கான் வெளியேறினார்.

Also read... மாஸ் கெட்டப்பில் காட்சியளிக்கும் நண்பன் பட மில்லிமீட்டர் - நெட்டிசன்கள் வியப்பு!

விஜய் சேதுபதி வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்ற குழப்பம் தீவிரமான நிலையில், கால்ஷீட் இல்லை என்று வெளியேறிய ஹிர்த்திக் ரோஷனே நடிக்க சம்மதித்தார். கொரோனா பெருந்தொற்றhல் பல படங்களின் படப்பிடிப்புகள் தள்ளிப்போக, விக்ரம் வேதா ரீமேக்கிற்கு தருவதற்கு அவரிடம் எக்கச்சக்கமான தேதிகள் இருந்தன. மாதவன் வேடத்தில் அதே சைப் அலிகான்.

இவர்கள் இருவரும் நடிப்பதும் உறுதியாகி பல மாதங்கள் கழித்து இன்று ஒருவழியாக படப்பிடிப்பை துபாயில் தொடங்கியுள்ளனர். தமிழில் வெளியான மாநகரம் உள்பட அரை டஜன் படங்கள் இந்தியில் ரீமேக்காகி வருகின்றன. அதில் இன்னுமொரு படமாக விக்ரம் வேதா இணைந்திருக்கிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி