Krrish 4: கிரிஷ் 4 படத்துக்கு 5 நிமிசத்தில் கதை: ரசிகரை பாராட்டிய ரித்திக் ரோஷன்!

கிரிஷ் 4

கிரிஷ் முதல் பாகம்  வெளிவந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை சமூகவலைதளத்தில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட நடிகர் ரித்திக் ரோஷன் கிரிஷ் 4 திரைப்படம் குறித்து சூசகமாக அறிவித்தார்.

  • Share this:
கிரிஷ் திரைப்படத்தின் 4வது பாகத்துக்கு 5 நிமிடத்தில் கதை எழுதிய ரசிகரை நடிகர் ரித்திக் ரோஷன் வியந்து பாராட்டியுள்ளார்.

ஹாலிவுட்  சூப்பர்ஹீரோ திரைப்படங்களை பார்த்து ஏங்கி கிடந்த இந்திய ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த சூப்பர்ஹீரோ திரைப்படம் கிரிஷ். ராகேஷ் ரோஷனின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் ஹிரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர். கோய் மில் கயா என்ற படத்தின் 2-ம் பாகமாக க்ரிஷ் கடந்த 2006ம் ஆண்டு வெளியானது. இதையடுத்து க்ரிஷ் 3 கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், கிரிஷ் முதல் பாகம்  வெளிவந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை சமூகவலைதளத்தில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட நடிகர் ரித்திக் ரோஷன், ‘இறந்தகாலம் முடிந்து விட்டது. எதிர்காலம் எதை கொண்டு வருகிறது என பார்ப்போம்’ என்றும் #Krrish4   என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டிருந்தார். இதையடுத்து, கிரிஷ் 4 திரைப்படம் குறித்த ஆவல் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.



ட்விட்டரில், சம்பித் என்ற ரசிகர் ஒருவர்,  கிரிஷ் 4 திரைப்படத்துக்கான கதையை 5 நிமிடத்தில் எழுதியுள்ளதாக கூறி கதையையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இறந்த காலம், நிகழ்காலம்,  வேற்று கிரகவாசிகள், பெண் சூப்பர் ஹிரோ போன்ற  அம்சங்கள் அவரது கதையில் இருந்தது.  இந்த பதிவை பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். இந்த பதிவு நடிகர் ரித்திக் ரோஷன் பார்வையிலும் பட்டுள்ளது.

தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை ரீ-ட்விட் செய்துள்ள ரித்திக் ரோஷன், “சிறந்த கற்பனை” என்று பாராட்டியுள்ளார்.
Published by:Murugesh M
First published: