அப்பா எனக்கு வழங்கிய அறிவுரை : மனம் திறந்து பேசிய ஹ்ரித்திக் ரோஷன்..!

அப்பா எனக்கு வழங்கிய அறிவுரை : மனம் திறந்து பேசிய ஹ்ரித்திக் ரோஷன்..!
  • Share this:
ஹ்ரித்திக் ரோஷன் தனது தந்தையும், திரைப்பட இயக்குநருமான ராகேஷ் ரோஷன் அவருக்குக் கூறிய அறிவுரையை பொதுவில் பகிர்ந்திருக்கிறார். பலவிதமான இயக்குநர்களுடன் சேர்ந்து வேலை செய்யும் தருணங்களில் அவர் மனதில் கொள்ள வேண்டியவை என்னென்ன என்பனவே அந்த அறிவுரை.

பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனும் அவருடைய தந்தையும் இணைந்து, ’க்ரிஷ்’, ’க்ரிஷ் 3’, ’காஹோ நா... ப்யார் ஹே’, ’கோய் மில் கயா’ போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்தவர்கள். பாலிவுட் உலகில் குறிப்பிடத்தக்க இடம் இவ்விருவருக்கும் உண்டு.

சஞ்சய் லீலா பன்சாலி, ஸோயா அக்தர், கரண் ஜோஹர், விதூ வினோத் சோப்ரா, சித்தார்த் ஆனந்த் போன்ற பல இயக்குநர்களின் படங்களில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்துள்ளார். இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, "நீங்கள் பல இயக்குநர்களுடன் பணி புரிகிறீர்களே என அடிக்கடி என்னிடம் பலர் கேட்பதுண்டு” எனக் கூறிய அவர், தன் தந்தை தன்னிடம், பல்வேறு விதமான இயக்குநர்களுடன் பணிபுரியும்போது, நான்கு விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ளுமாறு சொன்னதாகக் குறிப்பிட்டுள்ளார். அவை ”பரஸ்பர மரியாதை, மன உறுதி, தைரியம், சகிப்புத்தன்மை” என்பனவே.


ஹ்ரித்திக் ரோஷனுடைய கனவாக ஏதேனும் கதாபாத்திரம் உள்ளதா எனக் கேட்கப்பட்டபோது, அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் எல்லாம் அவருக்குப் பிடித்தமானவை எனக் கூறியுள்ளார். அவர் நடித்ததில் அவருடைய மனதுக்கு நெருக்கமான கதாபாத்திரம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, இரு வகையான கதாபாத்திரங்கள், ஒன்றுக்கொன்று எதிர்முனையில் இருப்பதாகக் கூறினார். ’சூப்பர் 30’, ’கோய் மில் கயா’ ஆகியவற்றில் ஒருவகையிலும், ‘வார்’, ’தூம் 2’வில் இன்னொரு வகையில் நடித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Also see:
First published: February 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்