ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Fighter : ஃபைட்டராகும் இந்தி சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன்… புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது

Fighter : ஃபைட்டராகும் இந்தி சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன்… புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது

தீபிகா படுகோனே - ஹிருத்திக் ரோஷன்

தீபிகா படுகோனே - ஹிருத்திக் ரோஷன்

ஃபைட்டர் படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன், தீபிகா படுகோனே, அனில் கபூர் உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  இந்தி திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பு, நடனம், ஆக்சன் காட்சிகள் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றவர் ஹிருத்திக் ரோஷன். இவர் நடிப்பில் வெளிவந்த க்ரிஷ், தூம் படங்கள் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

  சமீபத்தில் விக்ரம் வேதாவின் இந்தி ரீமேக் இதே பெயரில் வெளிவந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்த வேதா கேரக்டரில் ஹிருத்திக் ரோஷன் நடித்து பாராட்டைப் பெற்றார். தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்திரி இந்தியில் படத்தை இயக்கியிருந்தார்கள். இதில் மாதவன் கேரக்டரில் நடிகர் சைஃப் அலி கான் இடம்பெற்றிருந்தார்.

  வரவேற்பை பெறும் சமந்தாவின் ‘யசோதா’ பட ட்ரெய்லர்… ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்!!

  விக்ரம் வேதா இந்தி ரீமேக் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதுடன் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்தது.

  இந்நிலையில் ஹிருத்திக் ரோஷன் அடுத்ததாக Fighter (ஃபைட்டர்) என்ற படத்தில் நடிக்கவுள்ளார். முழு நீள ஆக்சன் படமாக ஃபைட்டர் உருவாக்கப்படவுள்ளது.

  Vijay Ajith: இதுவரை ஒரே நேரத்தில் வெளியான விஜய் - அஜித் படங்கள்... வெற்றியாளர் யார் தெரியுமா?

  ஃபைட்டர் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டுர் வரவேற்பை பெற்று வருகிறது. ஃபைட்டர் படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன், தீபிகா படுகோனே, அனில் கபூர் உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர்.

  இந்த படத்தை ஹிருத்திக்கை வைத்து ஏற்கனவே பேங் பேங், வார் படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கவுள்ளார். இவர் தற்போது ஷாரூக்கான் நடிக்கும் பதான் படத்தை இயக்கி வருகிறார்.

  ஃபைட்டர் படத்திற்கு விஷால் சேகர் இசையமைக்கின்றனர். இந்தப் படம் 2024 ஜனவரி 25-ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Bollywood