விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த ருசிகர தகவல் வெளியாகியுள்ளது.
தனது நடிப்பாலும், அசாத்திய நடனத்தாலும் இந்தியப் பெண்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். அவர் இன்று தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து இந்தியில் ரீமேக் ஆகும் விக்ரம் வேதா படத்தின் க்ளிம்ப்ஸை வெளியிட்டுள்ளது படக்குழு.
அதோடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளது. அதன்படி வேதா என்ற பெயரில் ரீமேக்காகும் விக்ரம் வேதா இந்தி படத்தில் வேதா கதாபாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷன் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து இந்தப் படத்தைக் காண தாங்கள் ஆர்வத்துடன் காத்திருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள் ஹ்ரித்திக் ரோஷன் ரசிகர்கள்.
Also Read - நடிகை நிதி அகர்வாலுடன் லிவிங் டுகெதரில் சிம்பு? விரைவில் திருமணம்?
கடந்த 2017-ம் ஆண்டு இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் தமிழில் வெளியானப் படம் விக்ரம் வேதா. இதில் விக்ரம் என்ற போலீஸ் அதிகாரியாக மாதவனும், வேதா என்ற வில்லனாக விஜய் சேதுபதியும் டைட்டில் ரோல்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் ஷ்ரதா ஸ்ரீநாத், வரலக்ஷ்மி சரத்குமார், கதிர், பிரேம் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
वेधा
.
VEDHA#vikramvedha pic.twitter.com/4GDkb7BXpl
— Hrithik Roshan (@iHrithik) January 10, 2022
இதையும் படிங்க - ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி
தமிழில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்ற இப்படம் தற்போது இந்தியில் ரீமேக்காகி வருவது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.