Krrish 4: க்ரிஷ் 4 திரைப்படத்தைப் பற்றி ‘க்ளூ’ கொடுத்த ரித்திக் ரோஷன்!

ரித்திக் ரோஷன்

’இறந்தகாலம் முடிந்து விட்டது. எதிர்காலம் க்ரிஷ் 4-ஐ கொண்டு வருமா எனப் பார்ப்போம்’

  • Share this:
    கிரிஷ் 4 வெளிவர வாய்ப்பிருக்கும் விஷயத்தை சமூக வலைதளத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்.

    இந்தியாவின் சூப்பர் ஹீரோ திரைப்படமான க்ரிஷ் திரைப்படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியானது. ராகேஷ் ரோஷனின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் ஹிரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர். கோய் மில் கயா என்ற படத்தின் 2-ம் பாகமாக க்ரிஷ் வெளியானது. இதையடுத்து க்ரிஷ் 3 கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் கிரிஷ் திரைப்படம் வெளிவந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை சமூகவலைதளத்தில் மகிழ்ச்சியுடன் நடிகர் ஹிருத்திக் ரோஷன் குறிப்பிட்டுள்ளார். இதுவரை கிரிஷ் திரைப்படம் மூன்று பாகங்களாக வெளிவந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், படத்தின் நான்காவது பாகம் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் ஹ்ரித்திக் ரோஷன் சூசகமாக தெரிவித்துள்ளார்.



    ’இறந்தகாலம் முடிந்து விட்டது. எதிர்காலம் க்ரிஷ் 4-ஐ கொண்டு வருமா எனப் பார்ப்போம்’ என்று குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார் ஹ்ரித்திக். இதைப் பார்த்த ரசிகர்கள் அப்படியெனில் க்ரிஷ் 4 படம் தயாராகிறதா என மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: