ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தமிழ் சினிமாவில் வடிவேலு அறிமுகமானது எப்படி? சுவாரசியத்தை பகிர்ந்த ராஜ்கிரண்

தமிழ் சினிமாவில் வடிவேலு அறிமுகமானது எப்படி? சுவாரசியத்தை பகிர்ந்த ராஜ்கிரண்

வடிவேலு - ராஜ்கிரண்

வடிவேலு - ராஜ்கிரண்

கவுண்டமணியிடம் அடி வாங்கும்போது, வடிவேலுவிடம் நாங்கள் ஒரு டயலாக்கை சொல்லியிருந்தோம். ஆனால் கவுண்டமணி மிதிக்கும் போது அவர் ‘படாத இடத்தில் பட்டுவிடப் போகுது’ என்று கத்துவார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வைகை புயல் வடிவேலு சினிமாவுக்குள் எப்படி வந்தார் என்பது குறித்து, தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், விநியோகஸ்தர், தயாரிப்பாளருமான ராஜ் கிரண் சுவாரசியமாக விவரித்துள்ளார்.

  வடிவேலுவுக்கு வாய்ப்பு அளித்தது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது- வடிவேலு என்னிடம் வாய்ப்பு கேட்டு வரவில்லை. நான் தயாரிப்பாளராக இருக்கும்போது விளம்பர யுக்திகளை விதவிதமாக பண்ணுவேன். தயாரிப்பாளராக இருக்கும்போதே எனக்கு ரசிகர்கள் வட்டாரம் இருந்தது.

  அதில் இளங்கோ என்ற பையனுக்கு திருமணம். அவர் நீங்கதான் தாலியை எடுத்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் கல்யாணம் நடக்கும் என்று வெறித்தனமான அன்பு கொண்டிருந்தார். அதற்காக நான் மதுரைக்கு ட்ரெயினில் சென்றேன். இரவு ட்ரெயின். காலையில் போய் சேர்ந்து விடுகிறோம்.

  கல்யாணம் நல்லபடியாக முடிந்து விடுகிறது. இதற்குப் பின்னர் இரவுதான் சென்னை திரும்புவதற்கு ட்ரெய்ன். அதனால் இடைப்பட்ட நேரத்தில் எனக்கு பேச்சு துணைக்காக வடிவேலுவை மாப்பிள்ளை இளங்கோ அனுப்பிவைத்தார். அப்படி வந்தவர்தான் வடிவேலு.

  பிக்பாஸில் 14 நாட்கள் இருந்த ஜி.பி.முத்து.. அவர் பெற்ற சம்பளம் இத்தனை லட்சமா?

  ஓட்டல் ரூமில் வடிவேல் என்னிடம் ‘சார் நாங்க மதுரையில் அப்படி பண்ணுவோம், இப்படி பண்ணி இருக்கோம், மூனிச் சாலையில் அதை செய்வோம் இதை கலாய்ப்போம்’ என எவ்வளவோ சொல்லிக் காட்டினார். நான் அதை ரசித்துக் கொண்டு சிரித்தேன். அப்போது அவர் என்னிடம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை கேட்கவில்லை. எனக்கும் அந்த சிந்தனை தோன்றவில்லை.

  மாஸான போஸ்டருடன் வருது துணிவு அப்டேட்.. ட்விட்டரை தெறிக்கவிடும் அஜித் ஃபேன்ஸ்!

  டைம் பாஸ் செய்வதற்காக வடிவேலுவை இளங்கோ அனுப்புகிறார். அவ்வளவுதான் அன்றைக்கு நடந்தது. இந்த சம்பவம் நடந்து இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து, என் ராசாவின் மனசிலே படம் பண்ணுகிறேன். அதில் சின்னதாக இரண்டு சீன்கள் வர்ற மாதிரி ஒரு கேரக்டர் இருந்தது. இதில் புதியவரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தோம். அப்போது டக்கென்று வடிவேலு ஞாபகம் வந்தது.

  இளங்கோ அவர் எனக்கு கடிதம் எழுதும் போதெல்லாம், பெயரையும், போன் நம்பரையும் சீல் குத்தி இருப்பார். பொதுவாக எனக்கு வரும் கடிதங்களில், ஃப்ரம் அட்ரஸ் மட்டும் தான் இருக்கும். ஆனால் இளங்கோதான் சீல் வைத்து அனுப்புவார்.

  வடிவேலுவை சினிமாவில் நடிக்க வைக்கலாம் என்ற எண்ணம் தோன்றியபோது, நான் திண்டுக்கல் ஷூட்டிங்கில் இருந்தேன். அங்கிருந்து சென்னை ஆபீசுக்கு போன் போட்டு இளங்கோ கடிதத்தை எடுக்கச் சொன்னேன். இது இரவு 10 மணி இருக்கும்.

  ஆபிசில் இருந்தவர்கள் கடிதத்தை கண்டுபிடித்து, இளங்கோவுக்கு போன்செய்து அவரிடம் ‘மதுரையில் ராஜ்கிரணுக்கு பொழுதுபோக்க அனுப்பிய அந்தப் பையன் திண்டுக்கல்லில் நாளை காலை 7 மணிக்கு இருக்க வேண்டும்’ என்று சொன்னார்கள். இந்த தகவல் இரவு 12 மணிக்கு இளங்கோவுக்கு தெரிவிக்கப்பட்டது.

  காலையில் வடிவேலு வந்தார். படத்தில் அவர் ஜோசியம் கேட்பது, கவுண்டமணியிடம் அடி வாங்குவது என 2 சீன்கள் வைத்திருந்தோம். கவுண்டமணியிடம் அடி வாங்கும்போது, வடிவேலுவிடம் நாங்கள் ஒரு டயலாக்கை சொல்லியிருந்தோம். ஆனால் கவுண்டமணி மிதிக்கும் போது அவர் ‘படாத இடத்தில் பட்டுவிடப் போகுது’ என்று கத்துவார். அது அவர் பயன்படுத்திய வார்த்தை. அந்த வார்த்தை ரசிக்கும்படியாக இருந்தது.

  ஷூட்டிங் முடிந்ததும் அண்ணே ஊருக்கு போறேன்னு வடிவேல் சொன்னார். நான் அவரிடம், இருடா போகலாம் என்று சொல்லிவிட்டு அவருக்காக கூடுதல் காட்சிகள், போடா போடா புண்ணாக்கு பாடல் உள்ளிட்டவற்றை அவருக்காக உருவாக்கினோம். இவ்வாறு ராஜ்கிரண் கூறினார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Vadivelu, Kollywood