இன்று மாலை நடைபெறவுள்ள தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு விழாவை நேரலையாக எப்படி பார்ப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு விழா இன்று மாலை 4 மணியளவில் டெல்லியில் நடைபெறவுள்ளது. தேசிய மீடியா சென்டரில் நடைபெறவுள்ள இந்த விழாவின்போது பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளைப் பெறும் நபர்கள், படங்கள் உள்ளிட்டவை அறிவிக்கப்படும்.
ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்கள். இன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சி என்பது 2020-ம் ஆண்டுக்கான விழாவாகும்.
100 Days of KGF2 : ‘இது வெறும் ஆரம்பம்தான்’ – அடுத்த பாகத்தின் அப்டேட்டை கொடுத்த படக்குழு
அந்தவகையில் கோலிவுட்டில் சூர்யா நடித்த சூரரைப் போற்று, விஜய் சேதுபதி, ஐஷ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரண சிங்கம் உள்ளிட்ட படங்கள் விருதுகளைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு விழாவை நேரலையாக ஆன்லைனில் பார்ப்பதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ஆடையின்றி போட்டோ ஷூட் நடத்திய ரன்வீர் சிங்.. வைரல் போட்டோஸ்
https://www.facebook.com/pibindia என்ற ஃபேஸ்புக் முகவரியிலும்,
https://www.youtube.com/watch?v=y0UIlpVcmcE என்ற யூடியூப் சேனல் லிங்க்கிலும் தேசிய திரைப்பட விருதுகள் விழா நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.