• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ‘சிம்ப்ளி ஃபிளை’ புத்தகம் 'சூரரைப்போற்று' என்ற திரைவடிவம் பெற்றது எப்படி?

‘சிம்ப்ளி ஃபிளை’ புத்தகம் 'சூரரைப்போற்று' என்ற திரைவடிவம் பெற்றது எப்படி?

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

‘சிம்ப்ளி ஃபிளை’ என்ற புத்தகம் சூரரைப்போற்று என்ற திரைவடிவம் பெற்றுள்ளது.

  • Share this:
அண்மை காலமாக சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயர் நடிகர் சூர்யா, இவர் நடிப்பில் சூரரைப் போற்று என்ற பெயரில் திரைப்படம் உருவாகியுள்ளது. இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா சூரரைப் போற்று படத்தை இயக்கியுள்ளார்.

ஏழை மக்களையும் விமானத்தில் பறக்க வைக்க வேண்டும் என்ற இளைஞரின் கனவு நிஜமாவதே படத்தின் கருவாகும். படத்தின் டிரைலர் வெளியான சில நாட்களிலேயே ஒரு கோடியே 70 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

ஏர்டெக்கன் என்ற விமான நிறுவனத்தின் நிறுவனரான, கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று கதையைத் தான் சூர்யா படத்தில் நடித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் போர் உள்ளிட்ட முக்கிய போர்களில் பங்கேற்றவர் ராணுவ கேப்டன் கோபிநாத். கர்நாடக மாநிலம் ஹசனா மாவட்டம் கொரூரு என்ற கிராமத்தில் பிறந்த கோபிநாத், கன்னட வழியில் படித்து, தனது கனவான ஏர்டெக்கன் நிறுவனத்தை 2003ல் நிறுவினார். இலக்கை நோக்கி தாம் பயணித்தபோது கடினமான தருணங்களை கேப்டன் கோபிநாத் 'Simply Fly' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புத்தகத்தை படித்த இந்தி தயாரிப்பாளர் குனீத் மோங்கா இதனை படமாக்க நினைத்தார். இதற்காக கோபிநாத்திடம் உரிமத்தை கோரியுள்ளார்.பின்னர் இந்த புத்தகத்தை படமாக்க சுதா கொங்கரா மற்றும் சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. முதலில் தனது வாழ்க்கை வரலாற்றை படமாக்க தயங்கிய கோபிநாத், பின்னர் இந்தியில் எடுக்க சம்மதித்தார். தமிழ்திரையுலகத்தில் இருந்து அழுத்தம் அதிகரித்ததால் முதலில் இப்படம் தமிழில் தயாராகியுள்ளது. அடுத்தாண்டு படம் இந்தியில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.



சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, மோகன்பாபு, உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் வரும் 12ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: