தேவர் மகன் பட ஸ்கிரிப்ட்டை ஒரே வாரத்தில் எழுதி முடித்த கமல்ஹாசன்

தேவர் மகன் படத்தின் ஸ்கிரிப்டை ஏழு நாட்களில் எழுதி முடித்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தேவர் மகன் பட ஸ்கிரிப்ட்டை ஒரே வாரத்தில் எழுதி முடித்த கமல்ஹாசன்
கமல்ஹாசன்
  • Share this:
நேற்று ஏ.ஆர்.ரஹ்மானுடன் சமூகவலைதளம் வாயிலாக உரையாடிய கமல்ஹாசன், தேவர் மகன் படத்தின் ஸ்கிரிப்டை ஏழு நாட்களில் எழுதி முடித்ததாக தெரிவித்தார்.

பரதன் இயக்கத்தில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்டோர் நடிப்பில் 1992-ம் ஆண்டு வெளியான படம் தேவர் மகன். அப்போது வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியைப்பெற்ற இந்தப் படத்தின் மீது எதிர் விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன.

தற்போது இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தி வரும் கமல்ஹாசன், இந்தப் படத்தை அடுத்து தலைவன் இருக்கின்றான் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இத்திரைப்படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


தேவர் மகன் பட இயக்குநர் பரதன், ஒரே வாரத்தில் இந்த படத்தின் ஸ்கிரிப்டை தரவில்லை என்றால் தான் இந்த படத்திலிருந்து விலகிவிடுவதாக கூறியதால், அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு ஏழு நாட்களில் ஸ்கிரிப்டை எழுதி முடித்ததாக கூறிய கமல்ஹாசன், இப்போது என்னிடம் நிறைய பெட்டி பெட்டியாக பணத்தைக் கொடுத்தாலும் ஒரு வாரத்தில் ஸ்கிரிப்ட் எழுத சொன்னால் தன்னால் முடியாது என்றும், அப்போது சவாலாக நினைத்து ஒரு உத்வேகத்துடன் எழுதியது தான் தேவர் மகன் ஸ்கிரிப்ட் என்றும் கூறினார்.

மேலும் படிக்க: நடிகை ரம்யா கிருஷ்ணன் சென்ற காரில் மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது
First published: June 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading