ஹாலிவு படமான தி க்ரே மேன் படத்தில் இடம்பெற்றது குறித்து நடிகர் தனுஷ் விவரித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நானே வருவேன் என்ற திரைப்படம், ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
தனுஷ் தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் இந்தப் படம் உருவாகி வருகிறது. தெலுங்கில் இதற்கு சார் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
இதேபோன்று சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற தனுஷ் நடிக்கும் திரைப்படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க - நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்த பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா!
இதற்கிடையே, ஹாலிவுட் படமான தனுஷ் நடித்துள்ள தி க்ரே மேன் என்ற திரைப்படம் வரும் 22ம்தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட சில திரையரங்குகளில் ஓடிடியில் வெளியாகுவதற்கு முன்பாக படத்தை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் தி க்ரே மேன் ஹாலிவுட் படத்தில் இடம்பெற்றது குறித்து தனுஷ் விவரித்துள்ளார். இதுதொடர்பாக நடைபெற்ற புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று தனுஷ் பேசியதாவது-
இதையும் படிங்க - Bala: கடினமான கதை களங்களில் வெற்றிக்கொடி நாட்டிய இயக்குநர் பாலா!
நடிகர்களை தேர்வு செய்யும் ஏஜென்சியினர் என்னை தொடர்பு கொண்டு ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கிறீர்களா என்று கேட்டனர். அவர்கள் உங்களுக்கு சம்மதமா என்று கேட்டனர். நான் அவர்களிடம் தயவு செய்து என்ன படம் என்ற விபரத்தை சொல்லுங்கள் என்றேன். அதற்கு அவர்கள் தி க்ரேமேன் குறித்து தெரிவித்தனர். இதன் பின்னர், இது மிகப்பெரும் ஹாலிவுட் ப்ரொஜெக்ட் என்பதை உணர்ந்தேன்.
இவ்வாறு தனுஷ் பேசினார்.
2009-ல் மார்க் க்ரீனி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு தி க்ரே மேன் படத்தை ரூசோ பிரதர்ஸ் உருவாக்கியுள்ளனர். ஹாலிவுட்டில் தனுஷ் நடித்திருப்பதை கொண்டாடும் ரசிகர்கள், தி க்ரே மேன் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor dhanush