முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஓடிடி நிறுவனங்கள் வட்டி வசூலிக்கலாமா? - இயக்குனர் சீனு ராமசாமி ஆதங்கம்

ஓடிடி நிறுவனங்கள் வட்டி வசூலிக்கலாமா? - இயக்குனர் சீனு ராமசாமி ஆதங்கம்

சீனு ராமசாமி

சீனு ராமசாமி

இயக்குனர் சீனு ராமசாமி ஓடிடி நிறுவனங்கள் மீது ஆதங்கத்தோடு ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

  • Last Updated :

ஓடிடி நிறுவனங்கள் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கின்றன. ஓடிடி-யை நம்பி படங்கள் எடுக்கப்படுவது அதிகரித்துள்ளது. சினிமாவில் வேலை இல்லாத இயக்குனர்கள் ஓடிடிக்காக வெப் தொடர்கள் இயக்குகிறார்கள். இந்த கொரோனா பேரிடர் காலத்தில் சினிமாவை உயிர்ப்புடன் வைத்திருந்ததில் ஓடிடிக்கு முக்கிய பங்குண்டு.

ஓடிடி நிறுவனங்கள் ஒரு படத்தை நேரடியாக வெளியிட அப்படத்தின் பட்ஜெட், இயக்குனர் மற்றும் நடிகருக்கு உள்ள சந்தை மதிப்பு ஆகியவற்றை வைத்து விலையை நிர்ணயம் செய்கின்றன. அதே படம் திரைக்கு வந்த பிறகு வெளியிடுவது என்றால் வேறொரு தொகை. அது முன்னதைவிட குறைவாக இருக்கும். அதேபோல் ஒரு படம் வெளியாகி ஒரே வாரத்தில் ஓடிடியில் வெளியானால் ஒரு தொகை. அதுவே இரண்டு வாரங்கள் கழித்து என்றால் தொகை குறையும். மூன்று வாரங்கள் என்றால் அதைவிட குறைவு.

இதுதான் ஓடிடி நிறுவனங்கள் வைத்திருக்கும் அடிப்படை கணக்கு. இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி ஓடிடி நிறுவனங்கள் மீது ஆதங்கத்தோடு ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். "சொன்ன தேதியை விட திரைப்படத்தை சற்றுத் தள்ளி வெளியிட்டால் தந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி வசூலிக்கின்றன சில ஓடிடி நிறுவனங்கள். கதைக்கு முக்கியத்துவம் தரும் தயாரிப்பாளர்கள் வளர்ந்தால் தானே ஓடிடி நிறுவனங்களுக்கு பெருமை, கதை படங்கள் வளரும். புதியவர்கள் தழைப்பர்.." எனும் குற்றச்சாட்டு தான் அது.

ஒரு படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிடுவது என்று பேசி தயாரிப்பாளரிடம் ஓடிடி நிறுவனங்கள் முன்னமே அட்வான்ஸ் தந்துவிடுகின்றன. பேசிய அதே தேதியில் படத்தை வெளியிடாவிட்டால் அதன் இழப்பு ஓடிடி நிறுவனங்களுக்குதான். அவர்கள் அதற்குரிய வட்டியை கேட்பது நியாயமே. சீனு ராமசாமியின் கோரிக்கையை ஓடிடி நிறுவனங்கள் ஏற்குமா என்பது சந்தேகம்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Tamil Cinema