தண்ணீர் பஞ்சத்தால் மழைக் காட்சிகளைத் தவிர்க்கும் தமிழ் சினிமா!

’தண்ணீரை தேவைக்குப் போக வீணடிப்பது கடுமையானக் குற்றம் என மக்கள் உணர்ந்துள்ளார்கள்’.

தண்ணீர் பஞ்சத்தால் மழைக் காட்சிகளைத் தவிர்க்கும் தமிழ் சினிமா!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:48 PM IST
  • Share this:
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை உணர்ந்து, மழை தொடர்பான காட்சிகளை முடிந்தவரை முற்றிலுமாக தவிர்த்து வருகிறது தமிழ் சினிமா உலகம்.

தமிழகத்தில் தொடர்ந்து தண்ணீர்ப் பஞ்சம் கடுமையாக அதிகரித்து உள்ளது. தண்ணீர் சிக்கனம், மழைநீர் சேமிப்பு தொடர்பாக பலரும் விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த வகையில் தமிழ் சினிமா துறையினரும் தங்கள் பங்குக்கு மழை தொடர்பான காட்சிகளைத் தவிர்த்து உதவி புரிந்து வருகின்றனர்.

இதுகுறித்து திரைப்படத் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறுகையில், “மழைக் காட்சிகள் தற்போது தவிர்க்கப்படுகின்றன. தண்ணீரை தேவைக்குப் போக வீணடிப்பது கடுமையான குற்றம் என மக்கள் உணர்ந்துள்ளார்கள். தண்ணீர் பற்றாக்குறையால் தண்ணீர் லாரி நிறுவனங்களும் சினிமா காட்சிகளுக்காக தண்ணீர் வழங்குவதில்லை. இது நல்லதொரு விழிப்புணர்வுதான்” என்றுள்ளார்.


மேலும் தனஞ்செயன் கூறுகையில், “இதையும் மீறி படத்தில் மழை காட்சிகள் வேன்றுமென்றால் தொழில்நுட்பத்தின் உதவியால் ஒரு பக்கெட் தண்ணீரில் செய்து முடித்து வருகிறார்கள். முன்பெல்லாம் மழை தொடர்பான காட்சிகள் என்றால் திரையில் மழையும் ஒரு கதாபாத்திரமாகவே தேவைப்படும்” என்றார்.

சினிமாவில் மழைக் காட்சிகள் தொடர்பாக திரைப்பட வர்ணனையாளர் பாரத் குமார் கூறுகையில், “சமீப காலமாகவே திரைப்படங்களுக்காகக் கிடைக்கும் லாரி தண்ணீர் பற்றாக்குறையாகத்தான் உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள மழைக் காட்சிகள் கூட மும்பை மற்றும் ஹைதராபாத்தில்தான் படம் பிடிக்கப்பட்டன” என்றார்.

மேலும் பார்க்க: 'இன்னும் ஐந்தாண்டுகளே உள்ளன’- தண்ணீர் பிரச்னைக்காகக் குரல் கொடுக்கும் நடிகை ஸ்ரீதிவ்யா
First published: July 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading