முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மாமன்னன் படத்தில் வைகைப்புயல் வடிவேலு இடம்பெற்றது எப்படி? விவரிக்கும் உதயநிதி

மாமன்னன் படத்தில் வைகைப்புயல் வடிவேலு இடம்பெற்றது எப்படி? விவரிக்கும் உதயநிதி

மாமன்னன் பட இயக்குனர் மாரி செல்வராஜுடன் வடிவேலு

மாமன்னன் பட இயக்குனர் மாரி செல்வராஜுடன் வடிவேலு

மாமன்னன் படத்தில் ஒரு குறிப்பிட்ட கேரக்டரில் வடிவேலு அண்ணன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று மாரி செல்வராஜ் கூறினார். - உதயநிதி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்தில் உதயநிதியுடன் வடிவேலு நடிக்கிறார். வடிவேலு இடம்பெற்றது குறித்து உதயநிதி விவரித்துள்ளார்.

வைகைப் புயல் வடிவேலு சமீப காலமாக குறைவான படங்களிலேயே நடித்து வருகிறார். அவரது நடிப்பில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வரா இயக்கத்தில் உதயநிதி மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் வடிவேலுவும் இடம்பெற்றுள்ளார். பெரும்பாலும் படங்களை தவிர்த்து வரும் வடிவேலு, இந்த படத்தில் நடிக்க சம்மதித்தது குறித்து உதயநிதி விவரித்துள்ளார்.

இதுதொடர்பாக நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில் உதயநிதி கூறியதாவது-

பரியேறும் பெருமாள் படத்திலிருந்தே மாரி செல்வராஜை எனக்கு நன்றாக தெரியும். கர்ணன் படத்தில் தேதி குறித்த சர்ச்சைபற்றி அவரிடம் தெரிவித்தேன். முந்தைய ஆட்சியில் நடந்த பிரச்னையை திமுக ஆட்சியில் நடந்ததைப் போன்று குறிப்பிட்டிருந்தார்கள். இதை அவரிடம் சொன்னதும், தவறு இருந்தால் எடுத்து விடலாம் என்று நீக்கி விட்டார்.

இதையும் படிங்க - அஜித் - எச்.வினோத் படத்தில் இடம்பெற்ற சமுத்திரக்கனி... ரசிகர்களுக்கு பிடித்தமான கதை என பாராட்டு

தொடர்ந்து அவரிடம் பேசியபோது, எனக்கொரு படம் பண்ணித்தருமாறு கேட்டேன். ஆர்ட்டிஸ்டுகளை விடுங்கள், அனிமல்ஸை கூட கர்ணனில் நடிக்க வைத்துள்ளீர்கள் என்று பாராட்டினேன். எனக்காக மற்ற கமிட்மென்ட்டுகளை தள்ளி வைத்து விட்டு மாமன்னன் படத்தை பண்ணுகிறார்.

மாமன்னன் படத்தில் ஒரு குறிப்பிட்ட கேரக்டரில் வடிவேலு அண்ணன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று மாரி செல்வராஜ் கூறினார். பின்னர், கர்ணன் படத்தை பார்க்குமாறு வடிவேலு அண்ணனிடம் சொன்னேன்.

இதையும் படிங்க - அதிக சம்பளம் வாங்கும் விஷயத்தில் ஹீரோக்களை மட்டும் குறை சொல்ல முடியாது... உதயநிதி ஸ்டாலின் பேட்டி

அவரும் படத்தை பார்த்து விட்டு பாராட்டினார். இந்த இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறேன், நீங்களும் நடிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன். நான் நடிப்பதாக இருந்தால், படத்தில் இடம்பெறுகிறேன் என்று கூறி வடிவேலு அண்ணனும், மாமன்னன் படத்தில் இடம்பெற்றார்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

First published:

Tags: Actor Vadivelu, Udhayanidhi Stalin