முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Nikki Galrani: நிக்கி கல்ராணியிடம் 50 லட்சம் மோசடி செய்த ஓட்டல் உரிமையாளர்

Nikki Galrani: நிக்கி கல்ராணியிடம் 50 லட்சம் மோசடி செய்த ஓட்டல் உரிமையாளர்

நிக்கி கல்ராணி

நிக்கி கல்ராணி

நடிகை நிக்கி கல்ராணி ஓட்டல் உரிமையாளர் ஒருவர் தன்னிடம் 50 லட்சம் மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகை நிக்கி கல்ராணி ஓட்டல் உரிமையாளர் ஒருவர் தன்னிடம் 50 லட்சம் மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஹீரோவாக அறிமுகமான ‘டார்லிங்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இதையடுத்து ’வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘கலகலப்பு 2’, ‘ஹர ஹர மஹாதேவகி’ போன்ற படங்களில் நடித்தார். பெங்களூரைச் சேர்ந்த நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி. அவரும் சினிமாவில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் நிலையத்தில் நடிகை நிக்கி கல்ராணி ஓட்டல் உரிமையாளர் ஒருவர் மீது ஒரு புகார் அளித்துள்ளார். அதில், ‘‘கோரமங்களா பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் நிகில். இவருடைய ஓட்டலில் கடந்த 2016-ம் ஆண்டு, ரூ.50 லட்சம் முதலீடு செய்திருந்தேன். இதற்காக மாதம் ரூ.1 லட்சம் கொடுப்பதாக நிகில் கூறியிருந்தார். ஆனால் இதுவரை நிகில் எனக்கு மாதம் ரூ.1 லட்சம் கொடுக்கவில்லை. மாறாக என்னிடம் வாங்கிய ரூ.50 லட்சத்தையும் திரும்ப கொடுக்கவில்லை.

இதுபற்றி பலமுறை நிகிலிடம் கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. என்னிடம் வாங்கிய ரூ.50 லட்சத்தை திரும்ப கொடுக்காமல் நிகில் மோசடி செய்துள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Nikki Galrani