மன அழுத்தத்தைப் போக்க மாஸ்டர் பட பாடலுக்கு நடனமாடும் மருத்துவர்கள்

நடிகை ஷில்பா ஷெட்டி இந்தப் பாடலுக்கு நடனமாடி டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்டிருந்ததும் வைரலானது.

மன அழுத்தத்தைப் போக்க மாஸ்டர் பட பாடலுக்கு நடனமாடும் மருத்துவர்கள்
மாஸ்டர்
  • Share this:
மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு மருத்துவ ஊழியர்கள் நடனமாடும் வீடியோ இணையத்தில் உலா வருகிறது.

நாடு முழுக்க கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைக்கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் முன் களத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள்.

நேரம் பார்க்காமல் முகக்கவசம் உள்ளிட்ட உபகரணங்களை அணிந்து கொண்டு பணியாற்றும் மருத்துவ ஊழியர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதும் இயல்பானதே. இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு மருத்துவமனை ஊழியர்கள் இணைந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் உலா வருகிறது.
ஏற்கெனவே இந்தப் பாடலுக்கு பிரபலங்கள் தொடங்கி பலரும் டிக்-டாக் செய்து வீடியோவாக வெளியிட்டிருந்தனர். அந்த வகையில் டிக்-டாக்கில் 1.5 பில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்திருந்தது. இதனிடையே இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டிருந்த வீடியோவில் பிரிட்டனில் குடியிருப்பு வாசிகள் இணைந்து தனி மனித இடைவெளியைக் கடைபிடித்து வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி இருந்தனர்.அதேபோல் நடிகை ஷில்பா ஷெட்டி இந்தப் பாடலுக்கு நடனமாடி டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்டிருந்ததும் வைரலானது.
@theshilpashettyThis is for you ##thalapathyvijay . Love this song! . 💃 ##Tamil ##tiktoktamil ##dance ##love ##tamilsong ##duetwithshilpa ##dancewithme♬ Vaathi Coming (From "Master") - Anirudh Ravichander & Gana Balachandarலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போயுள்ளது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading