Home /News /entertainment /

கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா…

கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா…

டாக்டர் பட்டம் பெறும் யுவன் சங்கர் ராஜா.

டாக்டர் பட்டம் பெறும் யுவன் சங்கர் ராஜா.

16 வயதில் சினிமாவுக்குள் நுழைந்து 25 ஆண்டுகளில் 150-க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சத்யபாமா பல்கலைக் கழகம் கவுரவித்துள்ளது.

    தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைத்து வருகிறார்யுவன் சங்கர் ராஜா. 16வ யதில் சினிமாவுக்குள் நுழைந்த யுவனுக்கு தற்போது 42 வயது ஆகிறது.

    இந்த சிறிய காலகட்டத்திற்குள் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் எனபல்வேறு மொழிகளில் இசையமைத்து இந்திய அளவில் அறியப்படும் சினிமா நட்சத்திரமாக யுவன் இருந்து வருகிறார்.

    அஜித்துடன் பைக் ரைடில் இணைந்த நடிகை மஞ்சு வாரியர்… லடாக்கில் சாகச பயணம்

    புதிய இசையமைப்பாளர்கள் கலக்கினாலும், யுவன் அளவுக்கு 25 ஆண்டுகாலம் அவர்கள் தாக்குப் பிடிப்பார்களா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு யுவன் தொடர்ச்சியான வெற்றிகளை சினிமாத்துறையில் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் சினிமாத்துறையில் யுவனின் பங்களிப்பை பாராட்டி அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை சத்யபாமா பல்கலைக் கழகம் வழங்கி இன்று கவுரவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ’16 வயதில் சினிமாவுக்குள் நுழைந்து 25 ஆண்டுகளில் 150-க்கும்  அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். யுவனின் பங்களிப்பை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

    சிரித்தப்படியே தலைகுனிந்த மகாலட்சுமி.. ரவீந்தர் - மகா திருமண வீடியோ இதோ!

    நேற்று வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற யுவன் சங்கர் ராஜா, சிம்புவை பாராட்டி பேசினார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஏ.ஆர். ரகுமான் குறித்து பேசிய யுவன், தான் எப்போதும் ரஹ்மானின் ரசிகன் என்றும், அவர் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்றும் கூறினார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Yuvan Shankar raja

    அடுத்த செய்தி