அருண் விஜய்யின் அந்தர்பல்டி... அசந்துபோன ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்!

அக்னி சிறகுகள் படக்குழுவினர்

இந்த சண்டைக்காட்சியை அமைத்தவர் ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்டண்ட் கோஆர்டினேட்டர் Viktor Ivanov.

 • Share this:
  ரஷ்யாவில் அக்னி சிறகுகள் படப்பிடிப்பு நடந்த போது நிகழ்ந்த சுவாரஸியமான நிகழ்வு ஒன்றை இயக்குனர் நவீன் பகிர்ந்துள்ளார்.

  மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் நீண்ட இடைவெளிக்குப் பின் அலாவுதீனும் அற்புத கேமராவும் என்ற படத்தை இயக்கினார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை. அதனைத் தொடர்ந்து அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் நவீன் இயக்கிவரும் படம், அக்னி சிறகுகள். அருண் விஜய், விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் இந்தப் படத்தில் அக்ஷராஹாசன், நாசர், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். ரஷ்யாவில் இதன் படப்பிடிப்பு நடந்த போது, சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த சண்டைக்காட்சியை அமைத்தவர் ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்டண்ட் கோஆர்டினேட்டர் Viktor Ivanov. ஹாலிவுட்டின் பல படங்களுக்கு ஸ்டண்ட் காட்சிகள் அமைத்தவர். அக்னி சிறகுகள் சண்டைக் காட்சியின்போது அருண் விஜய் அவருக்கு முன் தனக்குத் தெரிந்த வித்தைகளை செய்து காட்டியிருக்கிறார். அவரது அந்தர்பல்டியில் அசந்துபோன Viktor Ivanov, உனக்கு ரிகர்சல் தேவையில்லை, நேரா ஷாட்டுக்கே போயிடலாம் என்றிருக்கிறார்.

  அக்னி சிறகுகள் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைகிற நிலையில் நவீன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். சில தினங்கள் முன்பு விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு அக்னி சிறகுகளின் செகண்ட் லுக்கை வெளியிட்டனர். ஆக்ஷன் த்ரில்லர் படமான இது விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: