தமிழ் சினிமாவில் அறிமுகமான தொடக்க காலத்தில் இருந்த தனுஷுக்கு, ஹாலிவுட் ஹீரோ தனுஷ் தனக்குத்தானே அட்வைஸ் கொடுத்துள்ளார். நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தனுஷின் இந்த வீடியோ அதிக விருப்பங்களை பெற்று வருகிறது.
ஹாலிவுட் முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் படமான தி கிரே மேனில், முக்கிய கேரக்டரில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரது கேரக்டர் சிறப்பாக வந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பாலிவுட் சினிமாவிற்கு செல்வது என்பது, கோலிவுட் ஹீரோக்கள் பலருக்கு கனவாக இருக்கும் நிலையில், தனுஷ் தற்போது பாலிவுட்டை தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார்.
லைக்ஸை குவிக்கும் அல்லு அர்ஜுன் லேட்டஸ்ட் புகைப்படம்!
தி கிரே மேன் படத்தில் ஆவிக் சன் என்ற கேரக்டர் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கூலிப்படை நபராக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் தோன்றும் காட்சி அனைத்தும், ஆக்சன் நிறைந்ததாக இருப்பதால் தனுஷின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இன்றைக்கு திரைத்துறையில் முன்னணியில் இருந்தாலும் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை காலகட்டத்தில் மிக மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இதனை சமாளித்து சில வெற்றிகளை கொடுத்தாலும், இடைப்பட்ட காலத்தில் அவரது படங்கள் சில போதிய வரவேற்பை பெறவில்லை. இதனால் அவரது வெறுப்பாளர்ளின் கேலி கிண்டலுக்கு தனுஷ் ஆளானார்.
நயன்தாரா பெரிய நடிகையா? சர்ச்சைக்குள்ளாகும் பாலிவுட் பிரபலத்தின் கருத்து
இந்த நிலையில், அறிமுக நாயகன் தனுஷுக்கு ஹாலிவுட் நாயகன் தனுஷ் கொடுக்கும் அறிவுரை என்ன என்று சுவாரசியமான கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.
இதற்கு தனுஷ் அளித்த பதிலில், ‘உன்னுடைய உருவத்தை பார்த்து கிண்டல் செய்பவரை எண்ணி வருத்தப்படாதே. ஒருநாள் மிகப்பெரிய ஹாலிவுட் ஹீரோ, உன்னை செக்ஸி தமிழ் நண்பா என்று அழைப்பார்.’ என்று கூறியுள்ளார்.
தி கிரே மேன் படத்தில் ஹாலிவுட் நட்சத்திரம் கிறிஸ் ஈவன்ஸ், தனுஷை ‘Hello, my sexy tamil friend’ என்று அழைப்பார். இதனை குறிப்பிட்டு தனுஷ் பேசியது வைரலாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.