கொரோனா ஊரடங்குக்குப் பின் களத்தில் இறங்கும் ஹாலிவுட் படங்கள்!

ஹாலிவுட் படங்கள்

வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் பல படங்கள் இந்தியாவில் வெளியாக காத்திருக்கின்றன.

 • Share this:
  கொரோனா ஊரடங்கால் திரையரங்கில் வெளியாக வேண்டிய படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. திரையரங்கில் மட்டுமே வெளியிடுவோம் என்பவர்கள் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்துள்ளனர். ஆனால், சில ஹாலிவுட் படங்கள் மட்டும் தைரியமாக களத்துக்கு வருகின்றன.

  வின் டீசல் நடித்த F9 : Fast Saga ஆகஸ்ட் 5 இந்தியாவில் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். இன்டர்நேஷனல் மார்க்கெட்டில் இந்தப் படம் ஜுன் 25 வெளியாகி இதுவரை 600 மில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலித்துள்ளது. கொரோனா பேரிடரால் இந்தியாவில் ஆகஸ்ட் 5 என தேதி குறித்திருந்தனர். டெல்லி, மும்பையில் மட்டும் திரையரங்குகள் அனுமதிக்கப்பட்டாலும் படத்தை வெளியிட சம்பந்தப்பட்டவர்கள் தயார். ஆனால், அதற்கான சூழல் இல்லை. ஆகவே படத்தை மேலும் சில வாரங்களுக்கு தள்ளி வைக்க யோசித்து வருகின்றனர்.

  அதேநேரம் வார்னர் பிரதர்ஸின் Mortal Kombat திரைப்படத்தை ஜுலை 30 இந்திய திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதற்குள் டெல்லியிலாவது திரையரங்குகள் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கின்றனர். இதையடுத்து வார்னர் பிரதர்ஸின் The Conjuring: The Devil Made Me Do மற்றும் The Suicide Squad படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதில் கான்சூரிங் சீரிஸுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் இரண்டாம் பாகம் இந்தியாவில் 64 கோடிகளை வசூலித்தது. தற்போது வெளியாகவிருப்பது மூன்றாவது பாகமாகும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் பல படங்கள் இந்தியாவில் வெளியாக காத்திருக்கின்றன. இதனால், திரையரங்குகள் முழுமையாக திறக்காவிடினும் பரவாயில்லை, டெல்லி, மும்பையில் திறந்தாலே போதுமானது என்ற மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.

  இந்திப் படங்கள் திரையரங்குகளுக்கு வரும்முன் இந்த பிரமாண்ட ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் வெளியாகி சூழலை சகஜமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: