ஹாலிவுட் படங்கள் - கதறும் கங்கனா ரனவத்!

கங்கனா ரனவத்

மக்கள் எந்தப் படத்தை பார்க்க விரும்புகிறார்களோ அது திரையிடப்படும்

 • Share this:
  ஹாலிவுட் படங்கள் இந்தியப் படங்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஆதிக்கம் செலுத்துவதாக கங்கனா ரனவத் கண்டித்துள்ளார்.

  இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் தங்களின் வேரை ஆழ பரவவிட்டுள்ளன. ஆங்கிலத்தில் வெளிவந்து கொண்டிருந்த படங்களை இப்போது இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் வெளியிடுகின்றன. இதனால், நகரங்களில் மட்டுமின்றி கிராமங்கள்வரை ஹாலிவுட் படங்கள் ஊடுருவுகின்றன. 2020 க்கு முன் சென்னை பாக்ஸ் ஆபிஸில் பல வாரங்கள் ஹாலிவுட் படங்களே முதலிடத்தைப் பிடித்தன. முதல் ஐந்து இடங்களுக்குள் ஏதாவது ஒரு இந்தி, ஆங்கிலப் படம் வந்துவிடும். இதுதான் ஒட்டு மொத்த இந்தியாவிலும் நிலைமை.

  நேற்று கங்கனா ரனவத் நடித்த தலைவி வெளியானது. ஹாலிவுட் சூப்பர் ஹீரோ திரைப்படமான ஷாங் - சி யும், ஆக்ஷன் படமான எஃப் 9 ம் இந்தியா முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. ஹாலிவுட் படங்கள் எப்படி இந்திய திரையரங்குகளில் ஆதிக்கம் செலுத்தலாம்? தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற இந்திய மொழிப் படம் என்றால் ஓகே. வெளிநாட்டு மொழிப் படத்தை எப்படி அனுமதிப்பது என்றெல்லாம் சாடியிருக்கிறார் கங்கனா. கர்நாடகாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்பட இந்திய மொழிப் படங்களுக்கே கட்டுப்பாடு உண்டு என்பதெல்லாம் கங்கனாவுக்கு தெரியவில்லை. இந்திய அளவில் ஆங்கிலம் அந்நிய மொழி. தமிழகத்தில் இந்தி அந்நிய மொழி. சென்னையில் பல திரையரங்குகள் இந்தி, ஆங்கிலப் படங்களைத் தவிர வேறு எந்தப் படங்களையும் திரையிடுவதில்லை. இதுவே விஜய், அஜித், ரஜினி படங்கள் வெளியாகும் போது எந்தப் படத்துக்கும் திரையரங்குகள் கிடைக்காது. மக்கள் எந்தப் படத்தை பார்க்க விரும்புகிறார்களோ அது திரையிடப்படும்.

  இதற்கு கட்டுப்பாடு விதிக்க முடியுமா தெரியவில்லை. கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் இந்திய மொழிப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக தயங்கிய போது, ஹாலிவுட் படங்களே திரையரங்குகளுக்கு உதவின. நிற்க. கங்கனா விஷயத்துக்கு வருவோம். கங்கனா இத்தனை தூரம் சவுண்ட்விட காரணம் இருக்கிறது. கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் இந்தியில் வெளியான முதல் பெரிய பட்ஜெட் திரைப்படம் அக்ஷய் குமாரின் பெல்பாட்டம். அக்ஷய் குமார் இந்தியின் வசூல் சக்ரவர்த்திகளில் ஒருவர். வியாழன் வெளியான பெல்பாட்டம் ஞாயிறுவரை முதல் நான்கு தினங்களில் இந்திய அளவில் 12.75 கோடிகளை வசூலித்தது. நாயகன் யார் என்று தெரியாத ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படமான ஷாங் - சி முதல் மூன்று தினங்களில் 12.63 கோடிகளை வசூலித்துள்ளது. அக்ஷய் குமார் படத்துக்கே இதுதான் நிலை என்றால் தனது தலைவி படத்தின் நிலை என்னாவது?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அத்துடன் இன்னொரு பிரச்சனையும் உள்ளது. தலைவி படம் வெளியாகி நான்கு வாங்கள் கழித்தே ஓடிடிக்கு படத்தை தர வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் நிபந்தனை விதித்தனர். ஆனால், தலைவி தயாரிப்பாளர்கள் அதற்கு உடன்படவில்லை. படம் வெளியாகி இரண்டு வாரத்துக்குள் ஓடிடிக்கு தந்தால் மட்டுமே ஓடிடி தளங்கள் அதிக பணம் தரும். நான்கு வாரங்கள் கழித்து என்றால் குறைவான பணமே கிடைக்கும். அதனால், திரையரங்குகளின் நான்குவார நிபந்தனைக்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொள்ளாததால் சில மல்டிபிளக்ஸ்கள் தலைவி திரைப்படத்தை புறக்கணித்துள்ளன. அந்தத் திரையரங்குகளில் ஹாலிவுட் படங்கள் கனஜோராக ஓடிக் கொண்டிருக்கின்றன. ஹாலிவுட் படங்கள் இல்லையெனில் தலைவியை புறக்கணித்திருப்பார்களா? இது எல்லாம் சேர்ந்துதான் கங்கனாவை ஹாலிவுட் திரைப்படங்களுக்கு எதிராக சுதேசியாக கோபம் கொள்ள வைத்துள்ளது.

  தலைவிக்கு போட்டியாக ஷாங் - சி, எஃப் 9 படங்களுடன் ஜேம்ஸ் வானின் மேலிக்னென்ட் திரைப்படமும் வெளியாகியுள்ளது. எந்தப் படம் முந்துகிறது என்பது திங்கள்கிழமை தெரிந்துவிடும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: