The Conjuring 3: தி கான்ஜுரிங் 3 - தமிழில் வெளியாகும் ஹாலிவுட் பேய்!

The Conjuring 3: தி கான்ஜுரிங் 3 - தமிழில் வெளியாகும் ஹாலிவுட் பேய்!

கான்ஜுரிங் 3

உலகம் முழுவதும் உள்ள ஹாரர் பட ரசிகர்களின் டாப் 10 இல் இடம் பிடிக்கும் படம், தி கான்ஜுரிங். அதன் மூன்றாவது பாகம் தமிழில் வெளியாகிறது.

  • Share this:
    உலகம் முழுவதும் உள்ள ஹாரர் பட ரசிகர்களின் டாப் 10 இல் இடம் பிடிக்கும் படம், தி கான்ஜுரிங். அதன் மூன்றாவது பாகம் தமிழில் வெளியாகிறது.

    ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களைவிட பேய் படங்கள் அதிகம் வசூலிக்கும். காசு கொடுத்து திரையரங்கு சென்று பயப்படுவது அங்குள்ளவர்களின் ஹாபி. தி கான்ஜுரிங் 2013-ல் வெளியானது. ஜேம்ஸ் வான் படத்தை இயக்கியிருந்தார். பிறப்பால் ஆசியரான ஜேம்ஸ் வான் படத்தை இயக்கி, சைக்கலாஜிகல் க்ரைம் த்ரில்லர்களுக்கு புதுவழி காட்டியவர். பாஸ்ட் அண்ட் பியூரியஸ் சீரிஸில் மிக அதிகம் வசூல் செய்த ஏழாவது பாகமான பியூரியஸ் 7 படத்தை இயக்கியதும் இவரே. இந்தப் படத்தின் கமர்ஷியல் வெற்றியால் கிடைத்த வாய்ப்பு தான் அக்வாமேன். ஆனால், தி கான்ஜுரிங் 3 படத்தை இவர் இயக்கவில்லை. மைக்கேல் சாவ்ஸ் என்பவர் இயக்கியுள்ளார்.
    'தி கான்ஜுரிங் - தி டெவில் மேட் மீ டூ இட்' என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் ஜுன் 4-ம் தேதி திரைக்கு வருகிறது. யுஎஸ் உள்பட உலகம் முழுவதும் வார்னர் பிரதர்ஸ் வெளியிடுகிறது. இந்தியாவில் இப்படம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

    கான்ஜுரிங் திரைப்படங்களுக்கு இந்தியாவில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு என பிராந்திய மொழிகளில் வெளியாவதால் அனைத்து ரசிகர்களையும் படம் போய் சேரும். காட்ஸில்லா வெர்சஸ் காங் அளவுக்கு இல்லை என்றாலும், கொரோனா காலத்தில் திரையரங்குகளுக்கு லாபம் சம்பாதித்து தரும் படமாக இது இருக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: