• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட பாணியில் பிரபல நடிகர் டாம் குரூஸின் கார் திருட்டு

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட பாணியில் பிரபல நடிகர் டாம் குரூஸின் கார் திருட்டு

டாம் குரூஸ்

டாம் குரூஸ்

இங்கிலாந்தில் கடத்தப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் கார் மீட்கப்பட்டது.

  • Share this:
    சாதாரண மக்கள் பயன்படுத்தும் கார், பைக்குகளை திருடுவது என்பது மிகவும் சாதாரணமான ஒன்று.  அதுகுறித்த செய்திகளை நாம் நிறையப் பார்த்திருப்போம். சாதரண நபர்கள் சாலை ஓரத்திலோ, வீட்டு முன்போ நிறுத்தும் போது இந்த திருட்டு நடைபெறும். அந்த வாகனங்கள் விலை மலிவானவை என்பதால் அதிக பாதுகாப்பு அம்சங்கள் இருக்காது.

    ஆனால், ஹாலிவுட்டின் உட்ச நட்சத்திரமாக இருக்கும் ஒருவரது மிக விலைஉயர்ந்த சொகுசு கார் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்தி திருடப்பட்டுள்ளது.

    மிஷன் இம்பாசிபிள் படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் டாம் குரூஸ். தற்போது அதன் 7ஆம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பர்மிங்காம் நகரில் ஹோட்டல் ஒன்றில் நடந்த படப்பிடிப்பின்போது, அவர் தனது விலைஉயர்ந்த பி.எம்.டபிள்யூ எக்ஸ் 7 காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு சென்றார். சாவியின்றி கார் கதவை திறக்கவும், இயங்கவும் கூடிய வசதி கொண்ட அந்த கார் கடத்தப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட அந்த காரை ரேடியோ டிரான்ஸ்மிட்டரை பயன்படுத்தி திருடியுள்ளனர். காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ் டிராகிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காவல்துறையினர் சில மணி நேரத்தில் காரை மீட்டனர். இருப்பினும் காருக்குள் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: