Tom Cruise: நிறவெறி சர்ச்சை காரணமாக 3 கோல்டன் க்ளோப் விருதுகளை திருப்பிக் கொடுத்த டாம் க்ரூஸ்

டாம் க்ரூஸ்

திரைப்பட துறையில் சர்வதேச அளவில் ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக கருதப்படுவது, கோல்டன் குளோப் விருதுகள்.

  • Share this:
    நிறவெறி சர்ச்சை காரணமாக ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் தனது 3 கோல்டன் க்ளோப் விருதுகளை திருப்பியளித்துள்ளார்.

    ’ஜெர்ரி மாகுவேர்’, ’மாக்னோலியா’ மற்றும் ’பார்ன் ஆன் த 4த் ஆஃப் ஜூலை’ ஆகிய படங்களில் தனது பாத்திரங்களுக்காக டாம் க்ரூஸ் தான் வென்ற, மூன்று கோல்டன் குளோப் சிலைகளை திருப்பி அனுப்பியதாக, வெரைட்டி மற்றும் டெட்லைன் செய்தி வெளியிட்டன.

    திரைப்பட துறையில் சர்வதேச அளவில் ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக கருதப்படும், கோல்டன் குளோப் விருதுகள், சிறந்த நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறந்த திரைப்படங்களுக்கு வருடம்தோறும் ஹாலிவுட் பாரின் பிரெஸ் அசோசியேஷன் என்ற அமைப்பு மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த அமைப்பில் 90 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆனால் கடந்த 19 வருடங்களாக இந்த அமைப்பில் கறுப்பினத்தவர் யாரும் உறுப்பினர்களாக இல்லை என்றும், வெள்ளை நிறத்தவர்கள் மட்டுமே தொடர்ந்து உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இதையடுத்து கோல்டன் க்ளோப் விருது அமைப்புக்கு எதிராக நடிகர், நடிகைகள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் 1989, 1996, 1999 ஆகிய ஆண்டுகளில் தான் வென்ற கோல்டன் க்ளோப் விருதுகளை திருப்பி அனுப்பியிருப்பது பேசு பொருளாக மாறியிருக்கிறது. இதனால் விரைவில் விருது குழுவில் கறுப்பினத்தவர் சேர்க்கப்படுவார் எனவும் அமெரிக்க பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: