ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விண்வெளியில் உருவாகும் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் படம்!

விண்வெளியில் உருவாகும் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் படம்!

டாம் க்ரூஸ்

டாம் க்ரூஸ்

இந்தப் படம் 2020-ல் தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் கோவிட் -19 காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விண்வெளியில் படப்பிடிப்பு நடத்தும் முதல் நடிகர் என்ற பெருமையை பெறவிருக்கிறார் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ்.

டாம் குரூஸ் விண்வெளிப் பயணத்தை நிகழ்த்திய முதல் குடிமகனாக இருக்க முடியும். யுனிவர்சல் பிக்சர்ஸின் தலைவரான டோனா லாங்லி, ஒரு நேர்காணலின் போது, இயக்குனர் டக் லிமானுடன் புதிய ஆக்‌ஷன் படத்திற்கு இணைந்திருப்பதாக சொன்னார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் காட்சிகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் படமாக்கப்படவுள்ளது என்று லாங்லி கூறினார்.

“டாம் குரூஸ் நம்மை விண்வெளிக்கு அழைத்துச் செல்கிறார். அதோடு அவர் மொத்த உலகையும் விண்வெளிக்கு அழைத்துச் செல்கிறார். அதுதான் திட்டம்” என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் லாங்லி உறுதி செய்தார். இந்தப் படம் 2020-ல் தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் கோவிட் -19 காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. படம் தற்போது ஆரம்ப நிலையில் உள்ளது. இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

15 வருட பயணம்... பரதநாட்டியம், வீணை வாசிப்பு என ஆச்சர்யப்படுத்தும் இந்திரஜா சங்கர்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இத்திரைப்படத்திற்கு சுமார் 200 மில்லியன் டாலர் செலவாகும் என்ற செய்திகள் குறித்து லிமானிடம் கேட்கப்பட்டது. அதற்கு, இன்னும் இறுதி பட்ஜெட்டை முடிவு செய்யவில்லை என்றார் அவர்.

First published:

Tags: Hollywood