• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஓடிடி-யில் வெளியாகும் படத்துக்கு 233 கோடி சம்பளம் பெற்ற நடிகர்!

ஓடிடி-யில் வெளியாகும் படத்துக்கு 233 கோடி சம்பளம் பெற்ற நடிகர்!

லியோனார்டோ டிகாப்ரியோ

லியோனார்டோ டிகாப்ரியோ

பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, தற்போது ஓடிடி தளத்துக்காக தயாராகும் ‘டோண்ட் லுக் அப்’ படத்தில் நடிக்கிறார்.

  • Share this:
    ஓடிடி-யில் வெளியாகும் படம் ஒன்றிற்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ 233 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    கடந்த வருடம் உலகம் முழுக்க கொரோனா தொற்று பரவியது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டன. இதையடுத்து ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி அடைந்தன. இதன் காரணமாக ஓடிடி தளங்களுக்கென பிரத்யேகமாக படங்களும் தயாரிக்கப்பட்டன. தரத்திலும் பிரமாண்டத்திலும் எந்த வித குறையுமில்லாமல், திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு இணையான பட்ஜெட்டில் இந்தப் படங்கள் உருவாகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனால் ஓடிடி தளங்களுக்காக தயாராகும் படங்களில் நடிக்க முன்னணி நடிகர், நடிகைகளும் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, தற்போது ஓடிடி தளத்துக்காக தயாராகும் ‘டோண்ட் லுக் அப்’ படத்தில் நடிக்கிறார்.

    இந்தப் படத்தில் அவர் நடிக்க இந்திய மதிப்பில், 233 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. டிகாப்ரியோவுக்கு ஜோடியாக நடிக்கும் ஜெனிபர் லாரன்ஸுக்கு 186 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம். ஆடம் மெக்கே இயக்கியுள்ள இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் ஓடிடி-யில் வெளியாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: